india

img

வட இந்தியாவை உலுக்கும் வெப்ப அலை 24 மணிநேரத்தில் 54 பேர் உயிரிழப்பு

பருவநிலை மாற்றத்தால் இந்தியா வில் வானிலை மாற்றங்கள் தீவி ரமடைந்து வருகிறது. தென் மாநி லங்களில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், வட மாநிலங்களில் ஆப்பிரிக்க பாலை வன பூமியை போன்று வெயில் கொ ளுத்தி வருகிறது. தில்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, ஹரியானா, பஞ்சாப், மத்தி யப்பிரதேசம், ஜார்க்கண்ட் , சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப அலை வீசி வருவதால் அங்கு இயல்பு நிலை மிக மோசமான அளவில் பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக தில்லி, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் 50 டிகிரி செல்சியஸ் (ஒரு  இடங்களில் - தோராயமாக) வெப்பநிலை காணப் படுகிறது. இந்நிலையில், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை இல்லாததால் பாஜக ஆளும் பீகார் மாநிலத்தில் வெப்ப அலையால் ஏற்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் பீகார் மாநிலத்தில் வெப்ப பக்கவாதத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மட்டுமின்றி ஒடிசாவில் 10 பேரும், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தலா 5 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லியில் தலா ஒருவரும் என மொத்தமாக 54 பேர் வெப்ப பக்க வாதத்தால்  உயிரிழந்துள்ளனர். 24 மணிநேரத்தில் வெயிலுக்கு 54 பேர்உயி ரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

புழுதிப்புயலும்...

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதே சம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த 2  நாளை க்கு கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே போல உத்தரப்பிரதேசம், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லியில் வெப்ப அலையோடு புழுதிப் புயல் வீச வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க  ஒன்றிய அரசுக்கு ராஜஸ்தான்  உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக  தானாக முன்வந்து அம்மாநில உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் குமார் தண்ட் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு,“வெப்பம் மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொதுமக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். 

வெப்ப அலை காரணமாக, இந்த மாதத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டனர். நம்மிடம் செல்வதற்கு வேறு கிரகம் எதுவும் இல்லை. இப்போதே நாம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், நமது எதிர்கால தலைமுறை செழித்து வளரும் வாய்ப்பை இழந்துவிடும். அதனால் தற்போ தைய வெப்ப அலை மற்றும் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வரும்போது அவற்றை “தேசிய பேரி டர்களாக” ஒன்றிய அரசு அறிவிக்க  வேண்டிய நடவ டிக்கைகளை தொடங்க வேண்டும். 

இந்த அறிவிப்பு வெள்ளம், சூறாவளி, இயற்கை பேர ழிவுகள் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவார ணத்தை வழங்க உதவி செய்யும். நாடு முழுவதும் கடு மையான வெப்பம் மற்றும் குளிர் அலைகளால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்படுமேயானால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதற்கான பணியைத் தொடங்க வேண்டும்” என நீதிபதி அனூப் குமார் அமர்வு உத்தரவிட்டது. 

ராஜஸ்தான் அரசுக்கும் உத்தரவு

​​​​​​​“வெப்ப நோய்களின் விளைவாக உயிரிழக்கும் நபரின் உறவினர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும். வெப்ப அலையை சமாளிக்கும் செயல் திட்டத்தை திறம்பட செயல்படுத்த, உரிய நடவடிக்கை களை எடுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்” என ராஜஸ்தான் பாஜக அரசிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனூப் குமார் உத்தரவிட்டார்.


 

;