india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள உயிரற்ற கட்டிடங்களில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் செய்கிறது பாசிச பாஜக. இதன் பின்விளைவு பாஜகவிற்கு மிக கடுமையாக இருக்கும் என்பதை வெளிப்படையாகக் கூறுகிறேன்.

சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜ்

ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம் என்றால், தேர்தல் ஆணையரை ஏன் தேர்வு செய்யக்கூடாது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு சந்தேகம் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அமைதி காப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

தேர்தல்களை அமைப்பதில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், பணத்தை மிச்சப்படுத்த முயற்சிப்பதே “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்று கூறுகிறது. மக்களவை தேர்தலை நடத்த ரூ.3700 கோடி செலவிடப்படுகிறது. ரூ.3,700 கோடி என்பது ஆண்டு பட்ஜெட்டில் 0.02% மட்டுமே. பட்ஜெட்டின் 0.02% செலவைச் சேமிக்க பாஜகவினர் இந்தியாவின் ஒட்டுமொத்த கூட்டாட்சி கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள்.

காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்

தங்கள் மாநில பிரச்சனை என்று பேசினால் மட்டும் போதாது. மாநில பாஜக அரசுகளின் புல்டோசர் ஆட்சிக்கு எதிராக மோடி அரசில் உள்ள எந்த ஒன்றிய அமைச்சருக்காவது பேச தைரியம் உண்டா?

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி

அகமதாபாத்

பேருந்து - லாரி மோதல் குஜராத்தில் 6 பேர் பலி

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட் டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை தனி யார் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தின் வலது முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.