திங்கள், ஜனவரி 18, 2021

india

img

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம்  2021 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2020 பிப்ரவரி முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;