“தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை களை வலியுறுத்தி தில்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜேஎம்எம், சிவசேனா (உத்தவ) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.
பதேகர்
பஞ்சாப்பில் ரயில்கள் மோதல்
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹேப்பி அருகே மாதோபூரில் உள்ள அமிர்த சரஸ் - தில்லி மார்க்க ரயில் பாதை யில் ஞாயிறன்று அதிகாலை 3:30 மணி யளவில் சரக்கு ரயிலுக்காக கட்டப்பட் டுள்ள பாதையில் நின்ற சரக்கு ரயில் மீது எதிர்புறத்தில் இருந்த வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் இஞ்சின் தடம் புரண்டு, அருகில் இருந்த பயணி கள் ரயில் மீதும் விழுந்தது. அதிர்ஷ்டவச மாக பயணிகள் ரயில்கள் இருந்த பெட்டி யில் இருந்த யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. எனினும் சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் கவலைக் கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிஷா விபத்து நடந்த அதே நாளில்...
ஒடிஷா பாலசோர் என்ற இடத்தில் கடந்த 2023 ஜூன் 2 அன்று, 2 பயணி கள் ரயில் - ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்த நிலையில், 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்திய ரயில்வே வர லாற்றில் இது மிக மோசமான ரயில் விபத் தாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த சம்ப வம் நடந்த அதே நாளில் பஞ்சாப்பில் ரயில்கள் மோதல் சம்பவம் பதற் றத்தை ஏற்படுத்தியது.
புதுதில்லி
திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்
மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை மூலம் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 50 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு மே 10 அன்று இடைக்கால ஜாமீன் பெற்று, மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார். இடைக்கால ஜாமீன் சனி யன்று(ஜூன் 1) நிறைவு பெற்ற நிலை யில், ஞாயிறன்று (ஜூன் 2) கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறையில் சரணடைய வேண்டும் என இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக இடைக் கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதும் உடனடி உத்தரவு பிறப்பிக்க வில்லை. இதனால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக் கல் செய்தார். இந்த மனு மீது ஜூன் 5 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாம் கட்ட இடைக்கால ஜாமீன் மனுக்கள் அனைத்தும் ரத்து மற்றும் ஒத்தி வைக்கப்பட்டதால் ஞாயிறன்று பிற்பகல் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா, தில்லி அமைச்சர்கள், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் முன்னி லையில், தில்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து ஞாயிறன்று மாலை 6 மணியளவில் கெஜ்ரிவால் திகார் சிறை யில் சரணடைந்தார்.
பெங்களூரு
அவதூறு வழக்கில் ராகுலுக்கு சம்மன்
ஜூன் 7 அன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகாவில் கடந்தாண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச் சாரத்தின் பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மாநி லத்தில் முன்பு ஆட்சியில் இருந்த பாஜக அரசை, பொதுப்பணிகளில் 40 சதவீத கமிஷன் பெறும் அரசு என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு “கட்டணம் செலுத்தவும்”’ என்று தெரிவித்து, அதற் கான “க்யூஆர் கோட்” அடங்கிய சுவ ரொட்டிகளை கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதனை எதிர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தில் பாஜக பொதுச் செயலர் கேசவ் பிர சாத் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல் வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நீதி மன்றத்தில் சனியன்று நேரில் ஆஜரான நிலையில், அவர் களுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது அடுத்தகட்ட விசா ரணையின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரா வார் என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில், வரும் ஜூன் 7 அன்று ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்க ளூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டார்.