india

img

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;