india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக அமைச்சரை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர்
ராஜஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு மட் டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில்,  தேர்தல் முடிவில் 115 இடங்களில் வெற்றி  பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றி யது. காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மர ணம் காரணமாக கரண்பூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. பாஜக சாா்பில் எம்எல்ஏ ஆகாமலேயே மாநில அமைச்சராக  பொறுப்பேற்றுக் கொண்ட சுரேந்திர பால்  சிங், காங்கிரஸ் தரப்பில் குா்மீத் சிங்கின்  மகன் ரூபிந்தா் சிங் போட்டியிட்டனர்.

ஆம்  ஆத்மி, பகுஜன் சமாஜ், சுயேட்சை வேட்  பாளர்களும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், கரண்பூர் தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை திங்களன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில்  தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர்  சிங் (94,950 வாக்குகள்) 11,283 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலை யில், எம்எல்ஏ ஆகும் கனவோடு அமைச்ச ராக பொறுப்பேற்ற பாஜக வேட்பாளர் சுரேந்திர பால் சிங் (83,667 வாக்குகள்) படு தோல்வியை சந்தித்தார். இந்த தோல்வி யால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

பெங்களூரு
கர்நாடகாவிலும் களமிறங்கிய அமலாக்கத்துறை

மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், “இந்தியா” கூட்  டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்  துறை ஆகிய ஒன்றிய அமைப்புகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கெனவே மேற்கு வங்கம், தில்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் “இந்  தியா” கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு  அமலாக்கத்துறை சம்மன் மற்றும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில்,  அடுத்ததாக காங்கிரஸ் ஆளும் கர்நாட காவிலும் களமிறங்கியுள்ளது அமலாக் கத்துறை.

பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான கே.ஒய்.நஞ்சேகவுடாவின் (61)  வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்  களில் திங்களன்று அமலாக்கத்துறை அதி காரிகள் சோதனை நடத்தினர்.