india

img

உச்சநீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் நீட் தேர்வின் நம்பகத் தன்மைக்கு சிக்கல்

இளநிலை மருத்துவப் படிப்பிற் கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 அன்று நடைபெற்றது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற் பனை என பல்வேறு சர்ச்சை சம்ப வங்களுடன் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவு ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாண வர்கள் உள்பட நாடு முழுவதும் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஆனால் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தே கம் எழுப்பியுள்ளனர். மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றி ருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நெகட்டிவ் மதிப்பெண்கள் எங்கே?

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவ றாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப் பெண்கள் பிடித்தம் செய்யப்படும். விதிகள் இவ்வாறு உள்ள நிலை யில், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால்  இரண்டாமிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 715 மதிப்பெண்க ளும், 2 மதிப்பெண்கள் குறைந்தால் மூன்றாம் இடம் பிடிக்கும் மாண வர்களுக்கு 710 மதிப்பெண்களும் கிடைக்கும். ஆனால் இரண்டாமிடம் பிடித்த மாணவர்களுக்கு 718 மதிப்பெண்களும்,மூன்றாமிடம் பிடித்த மாணவர்களுக்கு 719 மதிப்பெண்களும் வழங்கப் பட்டுள்ளது. இந்த விவகாரம் நீட் தேர்வு முடிவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் பொழுது, “கருணை மதிப்பெண்கள் வழங்கப் பட்டதாலேயே மாணவர்கள் 719 மதிப்பெண்கள் பெற்றனர்” என நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் கருணை மதிப்பெண் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? தேர்வு எழுதிய அனைவருக்கும் வழங்கப்பட்டதா? என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்கவில்லை. 

இந்நிலையில், நீட் தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடி அரங்கேறியுள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை  நடத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போல கோழிக்கோடு நீட் பயிற்சி மையமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கோழிக்கோடு நீட் பயிற்சி மையம் தொடர்ந்த வழக்கில்,”கருணை மதிப்பெண்களை நீக்கி புதிய தேர்வு முடிவுப் பட்டியலை வெளி யிட வேண்டும்” என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் நாள்தோறும் வழக்கு தொடரப்பட்டு வருவதால், நீட் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.
 

;