india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக புலம்பெயர்ந்த பறவைகளிடையே இயற் கையில் புழக்கத்தில் உள்ளது. புலம்பெயர்ந்த பறவைகள் கோழிகளுடன் தொடர்பு கொள் ளும்போது, வளர்ப்பு கோழிகள் மத்தியில் வெடிப்பாக பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பா கிறது. குறிப்பாக ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) தொற்றுநோயின் கிருமிகள் மனிதர்க ளுக்கும் பரவக்கூடிய சாத்தியம் இருப்பதால், இந்த நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்க வும், தடுக்கவும் தேவையான அனைத்து நடவ டிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம்” என்று ஒன்றிய அரசு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நேரத்தில் கடந்த மே மாதம் 30 வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள  ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் விமானங்களுக்கான வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சனியன்று சென்னை - மும்பை இண் டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்ததை அடுத்து, அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேர், பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தகவல் வெளியிட்டுள்ளனர். 

“நாட்டின் பிற பகுதிகளில் சமூகத்தை இருண்ட யுகத்துக்கு இழுக்கும் முயற்சியாக,  சத்ரு பைரவி யாகம் போன்ற சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியதுபோல் இதுபோன்ற யாகங்கள் மேற்கொள் ளப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என கேரள மாநில சமூக நீதி அமைச்சர் ஆர்.பிந்து கூறியுள்ளார்.

கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் 
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் வன்முறை
வாக்குப்பதிவு இயந்திரம் சூறை, திருட்டு

42 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநி லத்தில் கடைசி கட்டத்தில் (7ஆவது) பராசத், பசிர்ஹாட், டயமண்ட் ஹார்பர், டம் டம், ஜெய்நகர், ஜாதவ்பூர், கொல் கத்தா தெற்கு, கொல்கத்தா வடக்கு,  மதுராபூர் உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கு சனியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பராசத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களி டையே வன்முறை மோதல் வெடித்த நிலை யில், அங்கு வாக்குப்பதிவு இயந்திரம் சூறையாடப்பட்டது. மேலும் இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்த நிலையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பாஜக - திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களை விரட்டிய டித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் திருட்டு
மேலும் மாநிலத்தின் ஒரு சில இடங்க ளில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யினர் வன்முறையில் ஈடுபட்டனர். பெனி மாதவ்பூர் எப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் பகுதியின் செக்டார் அலுவ லரின் ரிசர்வ் இவிஎம் இயந்திரம் திருடப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொச்சி
கேரளத்தை மிரட்டும் மழை
3 மாவட்டங்களுக்கு 
ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள சூறாவளி சுழற்சி கார ணமாகவும் மாநிலம் முழுவதும் கனமழை புரட்டியெடுத்து வரு கிறது.  குறிப்பாக வய நாடு, இடுக்கி, பாலக் காடு, திருச்சூர், மலப் புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்படும் அளவிற்கு கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் திருச்சூர், மலப் புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்க ளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்ச ரிக்கையும், வயநாடு, இடுக்கி, பாலக் காடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கேரளா  முழுவதும் கன மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு
“அது நானில்லை”
எஸ்ஐடி போலீசாரிடம் மறுத்த பிரஜ்வால் ரேவண்ணா

பாஜக கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தள தலைவ ரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா (33), 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தொ டர்பாக கடந்த ஏப்ரல் 25 அன்று 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடி யோக்கள் வெளியா னது. வீடியோ வெளி யானவுடன் மோடி அரசின் உதவியால் (எம்பிக்களுக்கான பாஸ்போர்ட்) வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார் பிரஜ்வால் ரேவண்ணா. ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பெங்களூரு திரும்பிய பிரஜ்வால் ரேவண்ணாவை கர்நாடக எஸ்ஐடி போலீசார் வெள்ளி யன்று கைது செய்தனர். 

தற்போது பிரஜ்வால் ரேவண்ணாவை 6 நாள் காவலில் எடுத்து சிறப்பு புல னாய்வுக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவிடம் ஆபாச வீடி யோக்களை காண்பித்து எஸ்ஐடி போலீசார் கேட்ட 161 கேள்விகளுக்கும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை. “நீங்கள் காட்டிய வீடியோக்களில் இருப் பது நான் இல்லை. நான் யாரையும் பலாத் காரம் செய்ததில்லை. பலாத்கார புகார்க ளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வீடியோக்கள் குறித்து எங்களுக்கு அதிகம் தெரியாது” என்று கூறி மறுத்துள்ளார். 

புதுதில்லி
ஜூன் 5 அன்று 
கெஜ்ரிவால் ஜாமீன் மனு
 விசாரணை

மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21 அன்று அமலாக் கத்துறை மூலம் கைது செய்யப் பட்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 50 நாட்கள் சிறைவாசத் திற்கு பிறகு மே 10 அன்று இடைக் கால ஜாமீன் பெற்று,முதல்வர் பதவியை கவனிக்காமல் மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இடைக்கால ஜாமீன் சனியன்றுடன் (ஜூன் 1) நிறைவு பெற்ற நிலையில், ஞாயிறன்று (ஜூன் 2) கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறை யில் சரணடைய உள்ளார். 

இந்நிலையில், மருத்துவ மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி ரோஸ் அவென் யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதும் உடனடிஉத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். இந்த மனு மீது ஜூன் 5 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

;