நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நாளை தொடங்குகிறது.
இந்தியாவில், 17-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பிகார், சத்தீஷ்கா், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காLaளம், அந்தமான் ஆகிய மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நாளை சட்டமன்றத் தோ்தலும் நடைபெறுகிறது.