தஞ்சாவூர், ஏப்.3-தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தொடர்பான தேர்தல் செலவின மேற்பார்வையாளர் மண்டுகுமார் தாஸ் அவர்களிடம் சட்டமன்ற இடைத்தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்ய வேட்பாளர்களின் கணக்குமுகவர்கள் தங்களது அனைத்து பதிவேடுகள் மற்றும் அறிக்கைகளுடன் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வு மற்றும் ஒத்திசைவுக்கு வருகை தருமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆ.அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.தேர்தல் செலவின மேற்பார்வையாளர் மண்டுகுமார் தாஸ்தலைமையில் தேர்தல் தொடர்பான ஆய்வு மற்றும் ஒத்திசைவு ஏப்.4,9,16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாய்வுக் கூட்டத்தில் செலவினம் தொடர்பான ஒருங்கிணைப்பு அலுவலர், உதவி செலவின மேற்பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கணக்கு குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது அனைத்து பதிவேடுகள் மற்றும் அறிக்கைகளுடன் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் செலவின ஆய்வு மற்றும் ஒத்திசைவுக்கு கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகையில், தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அவர்களின் சிறப்பு முகாம் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நேரில் சமர்ப்பிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.