செவ்வாய், ஜனவரி 26, 2021

india

img

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா!

விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் 12 நாட்களாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  3 வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்து வரும் 8ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். 

குறிப்பாக  தில்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டனிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தியாவில், அரசியல் மட்டுமல்லாது சினிமா, விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் உணவுப் படைவீரர்கள் விவசாயிகள்தான். அவர்களின் பிரச்னைகளையும் அச்சங்களையும் அரசு தீர்க்கவேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யவேண்டும். இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்யப்படவேண்டும்” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பதிவிட்டுள்ளார்.

;