india

img

தில்லியை நோக்கி விவசாயிகளின் அடுத்த அணி... 600 டிராக்டர்-டிராலிகளில் பஞ்சாபிலிருந்து புறப்பட்டது...

புதுதில்லி:
தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மேலும் ஒரு விவசாயிகள் பட்டாளம் 600 டிராக்டர்-டிராலிகளில் பஞ்சாபிலிருந்து புறப்பட்டு வருகிறது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள்நடத்திவரும் போராட்டத்தை, மத் திய அரசு கண்டுகொள்ளாமல் அசட்டை செய்துவருவது தொடர்வதால், தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் நாட்டின் பலபகுதிகளிலிருந்தும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர் களும் மேலும் மேலும் வந்து சேர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.‘கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டி’ என்னும் பதாகையின் கீழ்600 டிராக்டர்-டிராலிகளில் பஞ்சாபிலிருந்து குர்தாஸ்பூர், கபூர்தலா, அமிர்தசரஸ், தரன் தரன் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தில்லியில் நடைபெறும் போராட் டத்தில் கலந்துகொள்வதற்காக வெள் ளிக்கிழமையன்று புறப்பட்டார்கள். 
இதேபோன்று இரண்டு அணியினர் ஏற்கனவே தில்லி சிங்கூ எல்லைக்கு வந்துள்ளார்கள். வெள்ளிக் கிழமையன்று புறப்பட்டவர்கள் 600 டிராக்டர்-டிராலிகளிலும், இருசக்கர வாகனங்கள் கார்கள் மற்றும்வேன்களிலும் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் அநேகமாக 27ஆம் தேதி தில்லிக்கு வந்துவிடுவார்கள்.‘கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டி’ இன்றுவரை பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் ரயில் மறியல்போராட்டத்தை நடத்தி வரும் அமைப் பாகும்.இதேபோன்று பாரதிய கிசான் யூனியனுடன் இணைந்துள்ள விவசாயிகளில் ஒரு பிரிவினர் டிசம்பர் 26 அன்று பஞ்சாபிலிருந்து தில்லியை நோக்கி புறப்பட்டிருக்கின்றனர். மால்வா, தோபா, மாஜா ஆகியபகுதிகளில் உள்ள சுமார் 1100 கிராமங்களிலிருந்து விவசாயிகளைத் திரட்டி, தில்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஓரணியில் 15 ஆயிரம் விவசாயிகளும் மற்றோர்அணியில் 15 ஆயிரம் விவசாயிகளும்புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

கணக்கின்றி குவியும் விவசாயிகள்
அரசுத்தரப்பில் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்வதால், நாட்டிலுள்ள விவசாயிகளின் மத்தியில் கோபம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் விளைவாகஇப்போது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா முதலான மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் தில்லியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.தில்லி வந்துள்ள விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களுடன் வந்திருந்தார்கள். எனினும், மக்கள் மத்தியிலிருந்து தங்களுக்கு நாள்தோறும் உணவுப்பொருள்கள் வந்து குவிவதால், தாங்கள்கொண்டுவந்த உணவுப்பொருட் களை இதுவரை பிரிக்க வேண்டியதேவையே எங்களுக்கு ஏற்படவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான அவ்தார் சிங் கூறினார். போராட்டத்திலும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.  (ந.நி.)