india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

                                 ****************

கோவை மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்துகள் தமிழகம் வர பயணிகள் இல்லாததால் ஊர் திரும்ப வழியில்லாமல் 25 நாட்களுக்கும் மேலாக பேருந்துடன் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

                                 ****************

ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர்விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

                                 ****************

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முடிவை மே 3 வரை தள்ளிவைக்க, உயர் கல்வித்துறை தீர்மானித்துள்ளது.

                                 ****************

போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

                                 ****************

கன்னியாகுமரி மாவட்டம் வந்தவெளிநாட்டு பறவைகளின் காலில் வளையம் பொருத்தப்பட்டிருந்தது. அதில் உள்ள குறியீடுகள் பற்றி அறிய பறவைகள் ஆர்வலர்கள் முயற்சித்து வருகின்றனர்.

                                 ****************

தெலுங்கானாவில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

                                 ****************

கோவில்களில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய சனிக்கிழமையன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                 ****************

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா  மருத்துவர்கள் அறிவு ரைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

                                 ****************

சென்னையில் பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

                                 ****************

வெள்ளியன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.51 அடியாக குறைந்தது. பவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் 90.02 அடியாக உள்ளது.

                                 ****************

ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

                                 ****************

நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு ஜூன் மாதம்பொது நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். 

                                 ****************

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும்நிலையில், மிகப் பெரிய ரயில் நிலையங்களில், நடைமேடை டிக்கெட் விற்பனையை நிறுத்த மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

                                 ****************

தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசிதிருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடு வதற்கான நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு முடிவெடுத்துள்ளது.

                                 ****************

சரக்கு ரயில்கள் மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ. 1.17 லட்சம் கோடிவருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                 ****************

கொரோனா பரவலுக்கு மத்தியில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

                                 ****************

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;