“சமூக வலைதள சுதந்திரத்துக்கு அரசு கட்டுப் பாடு விதிக்கக் கூடாது. அதனாலேயே, சமூக வலைதளங்கள் மீது வழக்கு தொடருவதற்கு பெரும்பாலும் நான் ஒப்புக் கொள்வதில்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வெளிப்படையான விவாதங்கள் அவசியம்” என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்கூறியுள்ளார்.