india

img

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் (ஐஆர்எப்சி) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்
நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்
மொத்த காலியிடங்கள்: 04

பணி :  Hindi Translator (NE5)
காலியிடங்கள்: 01
தகுதி : இந்தி, ஆங்கிலம் பாடங்களை முதன்மையாக கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி :  Assistant (Finance) (NE5) 
காலியிடங்கள்: 02

பணி :  Assistant Administration
காலியிடங்கள்: 01

தகுதிகள்: மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(எச்ஆர்) முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி அனுபவம்: குறைந்தபட்சம்  2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து info@irfc.nic.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  01.02.2022 

மேலும் விபரங்கள் அறிய http://irfc.nic.in அல்லது  https://irfc.nic.in/uploads/Adv.%20Recruitment%20NE%202021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

;