திங்கள், செப்டம்பர் 27, 2021

india

img

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்.. ஆதித்யநாத்தின் ‘அப்பா ஜான்’ பேச்சுக்கு நிதிஷ் கட்சி கண்டனம்....

இந்தியா அனைத்து மதத்தவருக்கும் சொந்தம்!

புதுதில்லி, செப். 15 - “இந்தியா என்ற நாடு, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சொந்த மான நாடு!” என்று, உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத்திற்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநக ரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசும்போது, “கடந்த 2017-க்கு முன்பு வரை உத்தரப் பிரதேசத்தில் “அப்பா ஜான்’’ என்று  கூறுபவர்கள்தான் ரேசன் பொருட் களை அபகரித்து வந்தார்கள்” என்று முஸ்லிம்கள் மீது பழிபோட்டிருந்தார். முஸ்லிம்கள் தந்தையை உருது மொழி யில் “அப்பா ஜான்’ என்று அழைப்பது வழக்கம் என்ற நிலையில், ஆதித்யநாத் முஸ்லிம்களை குறிவைத்தே இவ்வாறு பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு காங் கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், தமன்னா ஹாஸ்மி என்ற சமூக செயற்பாட்டாளர் பீகாரின் முஷாபர் பூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஆதித்யநாத்தின் பேச்சுக்கு, பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முங்கர் தொகுதி எம்.பி. லாலன் சிங் இதுதொடர்பாக செய்தி யாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி யில், “அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்று மையே இந்தியாவின் கொள்கை. இந்த  நாடு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. எனவே நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. விரும்பத்தகாத கருத்துகள் காயத்தையே ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். ‘போஜ்புரி’ மற்றும் ‘மாகாஹி’ பேசும் மக்களை ‘ஆதிக்கம் செலுத்து பவர்கள்’ என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதற்கும் லாலன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

;