புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளள்ள வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற் காக 74 வயது மூத்த வீராங்கனை ஒருவர் சக்கர நாற்காலியில் தில்லி வந்துள்ளார்.
ஜல் கவுர், பட்டியாலாவைச் சேர்ந்த 74 வயது வீராங்கனை, கடந்த பத்தாண்டுகளாக சக்கர நாற்காலி யிலேயே அமர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் நடக்க முயன்றால் அவர்முழங்கால்களில் கடும் வலி ஏற்படும். எனினும் வீரச்சமர் புரிந்துவரும் விவசாயிகளுடன், தன்னையும் இணைத்துக் கொள்வதற்காக, பட்டியாலாவிலிருந்து தில்லி சிங்கூ எல்லைக்கு வந்து போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்.டிசம்பர் 12 அன்று அவர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தில்லி நோக்கி வந்த பேருந்தில் அவரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். தில்லியில் சிங்கூ எல்லைக்கு வந்தபின்,தன்னுடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தே போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.போராளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இதர 20 மூதாட்டிகளுடன் தங்கியிருக்கும் ஜல் கவுர், நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தே சுற்றி வருகிறார்.வீட்டிலிருந்த காலத்தில் படுக்கையைவிட்டு அநாவசியமாக எழுந்திருக்க மாட்டாராம். ஆனால்போராட்ட ஜுவாலையில் நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, தான் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்காகப் போராட வேண்டியிருக்கிறது என்றார்.
“நாங்கள் வெற்றிபெறும்வரை இந்தஇடத்தைவிட்டு நகர மாட்டோம் என்பதை ஏன் மோடி புரிந்துகொள்ள வில்லை,” என்று அவர் கேட்கிறார்.நாள்தோறும் காலை 11 மணிக்கு தான் தங்கியிருக்கும் முகாமிலிருந்து வெளிவந்து போராட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மேடையை நோக்கி வந்துவிடுகிறார். மாலையில் கதிரவன் மறையும்வரை அங்கேயே இருந்துவிட்டு, பின்னர்தான் திரும்புகிறார்.இவரைப்போன்றே இங்கே தங்கியிருக்கும் மால்கிட் கவுர் (வயது84) மற்றும் ஜஸ்விந்தர் கவுர் (வயது72) தங்கள் கைகளில் கம்புகள்இல்லாமல் நடக்க முடியாதவர்கள் ஆவர். ஆனால் அதைப்பற்றியெல் லாம் அவர்கள் கவலைப்படவில்லை.“எங்களுக்கு ஏற்படுகிற வலியைப் பற்றியெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை.
இங்கே நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக வந்திருக்கிறோம். எங்கள் உரிமைகள் மற்றும் எங்கள் நிலங்கள்தான் முக்கியமாகும்,” என்று அவர்கள் கூறுகிறார்கள். போராட்டத்தில் இவ்வாறு வயதான மூதாட்டிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் மட்டும் பங்கேற்க வில்லை. 4 வயது முதல் 12 வயதுவரையுள்ள சிறார்களும் பங்கேற்றிருக் கிறார்கள். இவர்கள் சண்டிகரின் அருகேயுள்ள கிராமம் ஒன்றிலிருந்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “நாங்கள் குழந்தைகளையும் இங்கே அழைத்துவந்திருக்கிறோம். ஏனெனில், அவர்களுக்கும் தன் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகள் ஏன் போராடு கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்கள்.(ந.நி.)