india

img

பாதுகாப்புப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு

தொழில் பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Athletics - 90

2. Boxing - 18

3. Basket ball - 08

4. Gymnastics - 05

5. Football - 10

6. Hockey - 15

7. Hand ball - 06

8. Judo - 11

9. Kabaddi - 08

10. Shooting - 03

11. Swimming - 19

12.  Volley ball - 05

13. Weight Lifting - 23

14. Wrestling - 14

15. Taekwondo - 08

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சர்வதேச, தேசிய, பல்கலை இடையிலான போட்டிகள், தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

உயரம்: குறைந்தது ஆண்கள் 167 செ.மீட்டரும்,  பெண்கள் 153 செ.மீட்டருக்கும்  இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, புரபிசியன்சி தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://cisfrectt.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022

மேலும் விபரங்கள் அறிய https://drive.google.com/file/d/12HPfnC32t820IzxugmWCtrbJhbu_Hn0b/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;