india

img

டிச.8 பாரத் பந்த் நாளில் முதல்வர் கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைத்த தில்லி பாஜக காவல்துறை.... உ.பி.முன்னாள் முதல்வரின் குடியிருப்புச் சாலைக்கு சீல்வைப்பு...

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பாரத் பந்த் நடைபெற்ற டிசம்பர்8 செவ்வாய்க்கிழமையன்று  புதுதில்லி மாநில முதல்வர் வீட்டிலிருந்து வெளியே செல்லாதவாறு, பாஜகவின் தில்லிக் காவல்துறை அவரை வீட்டுக் காவலில் வைத்தது. 
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்களன்று போராடும் விவசாயிகளைப் பார்த்து, தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார். பாரத் பந்த்திற்கும் தன் ஆதரவினைத் தெரிவித்தார். இதனை அடுத்து தில்லிக் காவல்துறை இவ்வாறு செய்துள்ளது.இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

‘பாஜகவின் தில்லிக் காவல்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டுக் காவலில் வைத்துள்ளது. அவர் நேற்றையதினம் சிங்கூ எல்லைக்குச் சென்று போராடும்விவசாயிகளைச் சந்தித்தபின், இந் நடவடிக்கையை தில்லிக் காவல்துறை எடுத்துள்ளது. எவரொருவரும் அவருடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கோ அல்லது உள்ளே வருவதற்கோ அனுமதிக்கப்பட வில்லை.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகிலேஷிற்கும் அனுமதியில்லை
இதேபோன்று உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்விற்கும் பேரணி நடைபெறும் இடத்திற்குச் செல்ல உத்தரப்பிரதேச மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டது. கோவிட்-19 இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. அவர் குடியிருப்பு உள்ள சாலையையே காவல்துறையினர் எவரும் செல்லாதவாறு ‘சீல்’ வைத்துவிட்டனர்.எனினும் அகிலேஷ் யாதவ், காவல்துறையினரின் தடையை மீறி தன் ஆதர வாளர்களுடன் கண்ணௌஜ் மாவட்டத்தில் விவசாயிகளின் பேரணி நடைபெறும் இடத்திற்குச் செல்ல முயற்சித்தார். காவல்துறை யினர் அவர்களைச் செல்லமுடியாதவாறு தடுத்து நிறுத்தியதை அடுத்து அவர்கள் சாலையிலேயே அமர்ந்தனர். சமாஜ் வாதிகட்சியினர் மத்திய, மாநில அரசாங்கங் களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.    கண்ணௌஜ் மாவட்டத்தில் பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  (ந.நி.)