புதுதில்லி:
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் தமிழ்மொழிக்குஇருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது, வழக்கம்போல மற்றுமொரு ஏமாற்றுஅறிவிப்புதான் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
“காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கைஅமைக்கப்படும். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும், பாரதியார் பெயரிலான இந்த இருக்கை பயன்படும்” என்று கடந்தசெப்டம்பர் 11 அன்று பாரதியாரின் 100-வது நினைவு தினத்தன்று பிரதமர்நரேந்திர மோடி அறிவித்தார்.பொதுவாக இந்த அறிவிப்புக்கு வரவேற்பு இருந்தாலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இதுவரை தமிழ் மொழிக்கென தனி இருக்கை இல்லாத நிலையில், அதனை மோடி ஏற்படுத்தியுள்ளார். இதன்முலம் தமிழுக்கும் பாரதிக்கும்ஒரேநேரத்தில் பிரதமர் மோடி பெருமை சேர்த்து விட்டார் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வந்தனர். தமிழ் மீது பற்று கொண்ட ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் அவர் கள் கூவினர்.
இந்நிலையில், காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்இருக்கை உள்ளதாகவும், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் 1962-ஆம்ஆண்டு வாக்கிலேயே தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு விட்டது என்றும் உஷா சுப்பிரமணியன் என்பவர் கூறியுள்ளார். மேலும், அந்த இருக்கை மூலமே, தான் தமிழ் படித்ததாகவும் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தனது டுவிட்டர்பக்கத்தில் விரிவான கருத்துப் பதிவையும் உஷா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.“பிரதமர் மோடி தமிழுக்கு பாரதிபெயரில் ஒரு இருக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள செய்தி கேட்டு எனக்குச் சிரிப்புவருகிறது. நான் இதே பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் முனைவர்சித்தலிங்கையாவிடம் தமிழ் பயின்றுள்ளேன். அநேகமாக 1962 ஆம் வருடம் நேருவின் தலைமையிலிருந்த மத்திய அரசு அமைத்தது என நினைக்கிறேன்.அப்போது நான் ஒரே மாணவிதான் அங்குத் தமிழ் படித்தேன். எனது ஆசிரியர் சித்தலிங்கையா எனக்கு ஏராளமான இலக்கியம் மற்றும் இலக்கணங்களைக் கற்பித்தார். சில வருடங்கள் சென்ற பிறகு நான்அதே பல்கலைக்கழகத்தில் சித்தலிங்கையா மற்றும் சிவராமன் ஆகியோரின் வகுப்புக்களுக்குச் சென்றுள் ளேன். எனவே, இந்த பல்கலையில் 50 ஆண்டுகளாகத் தமிழ் உள்ளதால் புதிதாக தமிழ் இருக்கை என அரசியல் விளையாட்டு செய்ய வேண் டாம்” என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.