வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மதுரை அலங்காநல்லூரில்  சனிக்கிழமையன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேனருடன் வந்தனர்.  நாங்கள் விவசாயிகள், தீவிரவாதிகள் அல்ல என எதிர்ப்பு தெரிவித்தனர்.

                                          ***************

 பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                          ***************

50 சதவீத இருக்கை அனுமதி உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

                                          ***************

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

                                          ***************

கோவின் செயலில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

                                          ***************

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.

                                          ***************

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

                                          ***************

உலகளவில் பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், சிக்னல் சர்வர்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

;