வியாழன், ஜனவரி 28, 2021

india

img

மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்... காஷ்மீரில் குப்கார் கூட்டணி முன்னிலை....

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களில் பரூக் அப்துல்லா தலைமையிலான குப்கார் பிரகடனத்திற்காக அமைக்கப்பட்ட மக்கள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில்உள்ளது. 

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 நடைபெற்றது. மதியம் வரை வந்துள்ள தகவல்களின்படி குப்கார் கூட்டணிக்கு 81 இடங்களிலும், பாஜகவிற்கு 47 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஜம்மு பகுதியில் பாஜக 44 இடங்களிலும், குப்கார் கூட்டணி 20 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் காஷ்மீர் பகுதியில் குப்கார் கூட்டணி 61 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களில் மட்டும் முன்னணியில்இருக்கின்றன. மொத்தம் 280 இடங்களுக்கு வாக்குகள்எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு  மாவட்டத்திற்கும் தலா 14 இடங்கள் என்ற விதத்தில் 20 மாவட்டங்களுக்கு 280 இடங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.

;