india

img

பசுவதை தடை விவசாயிகளுக்கும் அறிவியலுக்கும் எதிரானது... கர்நாடக அரசின் சட்டத்திற்கு சித்தராமையா கண்டனம்...

பெங்களூரு:
கர்நாடகத்தில் பசுவதை தடைசட்ட மசோதாவை, அம்மாநில பாஜகஅரசு வெள்ளியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. பாஜக-வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், மேலவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், தற்போது அவசரச் சட்டம்பிறப்பிக்க எடியூரப்பா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக பாஜகஅரசின் பசுவதை தடைச் சட்ட மசோதாவுக்கு, முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையா கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.“கர்நாடக அரசு கொண்டுவந்துள்ள பசுவதைத் தடைச் சட்டமசோதா கொடூரமானது; அறிவியலுக்கு மாறானது. அதுமட்டுமன்றி, விவசாயிகளுக்கும் எதிரானது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் வாக்குகளைப் பெறுவதும், பசுமாடுகளை கொண்டு செல்வோர் மீதுதாக்குதல் நடத்துவோரைப் பாதுகாப்பதும்தான் இந்த மசோதாவின் நோக்கம்.பசுமாடுகள் மீது பாஜக-வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந் தால், வயதான மாடுகளை அரசே ஏற்று பராமரிக்க வேண்டும். அல்லதுஅவற்றின் பராமரிப்புக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடிபசுக்கள் பால் வழங்குவதை நிறுத்துகின்றன. அவற்றைப் பராமரிக்க நாளொன்றுக்கு தலா 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதாவதுபால் வழங்காத ஒரு பசு மாட்டை பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 36 ஆயிரத்து 500 வேண்டும். 5 லட்சம் ஏக்கர் நிலம்மற்றும் கோசாலைகளும் தேவைப் படும். கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், மொத்தம் 84 லட்சத்து 69 ஆயிரத்து 4 கால்நடைகள் உள்ளன. இவற்றை வளர்க்க ஆண்டுக்கு2.76 கோடி டன் தீவனம் தேவைப்படுகிறது. ஆனால் 1.49 கோடி டன் அளவிற்கே இங்கு தீவனங்கள் கிடைக் கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 15ஆண்டுகள் கர்நாடகம் வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், தீவன பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்பது இயல்பானது. கர்நாடகத்தில்பசுவதைத் தடை சட்டம் 1964-ம் ஆண்டுமுதலே அமலில் உள்ளது. பால் வழங்காத, விவசாயத்திற்கு பயன்படாத, நோய்வாய்ப்பட்ட பசுக்களைகொல்ல அந்த சட்டம் அனுமதி வழங்கியது. ஆனால் புதிய சட்டம் அதற்குஅனுமதி வழங்கவில்லை.” என்று சித்தராமையா கூறியுள்ளார்.