india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

சர்ச்சைக்குரிய கேரள போலீஸ் அவசர சட்டத்திருத்தத்தை மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அமல்படுத்தாமல் நிறுத்திவைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

                                                      ********************

ஹரியானாவில் தடை செய்யப்பட்ட 74,400 மருந்துகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

                                                      ********************

2020 - 21-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிகத் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

                                                      ********************

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

                                                      ********************

பதவியேற்பின் போது ‘ஹிந்துஸ்தான்’ என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் எனக் கூறிய ஒவைசிகட்சி எம்.எல்.ஏ.வால் பீகார் பேரவையில் சலசலப்பு எழுந்தது.

                                                      ********************

நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பீகார் மாநிலம் மாறியுள்ளதாக பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                                      ********************

நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா 2ம் அலைஏற்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

                                                      ********************

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது காற்று வேகமாக வீசினால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

                                                      ********************

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திங்களன்று திறந்து வைத்தார்.

                                                      ********************

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

                                                      ********************

வேலூரிலுள்ள அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

                                                      ********************

வடகிழக்குப் பருவ  மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

                                                      ********************

கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிய நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க -ஐரோப்பிய செயற்கைக்கோள் கலிபோர்னியாவிலிருந்து பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

                                                      ********************

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்துகொள்கின்றனர். இலவச உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக 8 கிலோ மீட்டர் நீள வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள் என செய்திகள் கூறுகின்றன.

                                                      ********************

சிங்காரா வனக் கோட்டத்தில் புலியின் சடலத்தின் அருகிலிருந்து மீட்கப்பட்ட 2 ஆண் புலிக்குட்டிகள் வண்டலூர் கொண்டு செல்லப்பட்டன.

                                                      ********************

நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று கவலை தெரிவித்திருக்கும் உச்சநீதிமன்றம், தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளது.

                                                      ********************

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                                      ********************

உலகளவில் கொரோனா தொற்று பாதித்து பலியானோர் எண்ணிக்கை 13.93 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

                                                      ********************

திங்களன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.38,016 ஆக விற்பனை செய்யப்பட்டது.

;