சென்னை:
இரண்டாம் வகை நீரிழிவின் புதிய துணைப்பிரிவுகள் மற்றும் இந்திய மக்கள்தொகையில் நுண் ரத்தக்குழாய் விளைவுகளோடு அவைகளின் தொடர்பு குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
கோபாலபுரத்தில் உள்ள சென்னை நீரழிவு ஆராய்ச்சி மையம் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் மற் றும் ஸ்காட்லாந்தில் உள்ள டன்டி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தின. இதில் ஸ்கான்டிநேவியா நாடுகள் என்று அழைக்கப்படும் நார்வே, டென்மார்க்,ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை கொண்டவர்களுக்கும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் நடத்தப்பட்ட ஆய்வில் மாறுபட்ட பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியர்களை உள்ளடக்கிய தெற்காசிய மக்கள் 2 ஆம் வகை நீரழிவு உருவாவதற்கு அதிக சாத்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அடிவயிற்றுக் கொழுப்பு, குறைந்த அளவிலான உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) இருந்தபோதிலும் கூட, இளவயதிலேயே 2ஆம் வகை நீரிழிவு ஏற்படுவதாகவும் பீட்டா-செல் செயல் பிறழ்சியானது இந்தியர்களிடம் முன்கூட்டியே மற்றும் மிக விரைவாக நிகழ்வதும் தெரியவந்துள் ளது. இந்தியாவில் 2 ஆம் வகை நீரிழிவுள்ள 19084 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் கூறினார். 450,000 – க்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகளைக் கொண்டு உலகளவில் மிகப் பெரிய ஆய்வு முடிவுகளாக இது வந்துள்ளது என்று ஆய்வு மையத்தின் துணைத்தலைவர் டாக்டர் அஞ்சனா கூறினார்.“இந்த ஆய்வு முடிவுகள், இந்தியர்களுக்கு மட்டும் தனித் துவமாக இருப்பதாக’’ டன்டி பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் மரபணுத் தொகுதி கல்வி துறையின் தலைவரான டாக்டர்.காலின் பால்மர், கூறினார்.