தமிழ்நாட்டில் 45 சுகாதார மாவட்டங்களில் டெங்கு பாதிப்பைக் கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு!
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், குமரி, நீலகிரி மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரியாக வடிவேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்யாறு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சோமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர், பூவிருந்தவல்லி, தென்காசி, விருதுநகர், சிவகாசி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக கிருஷ்ணராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி சிவகாசி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, கண்காணிப்பு மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் கண்காணிப்பு மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக நிர்மல்சன் ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, தேனி, ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல், பழனி, நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக நாகராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நோய் பரவலை அன்றாடம் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க 9 சிறப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.