தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்ந்து அதிகரிப்பு.
தமிழ்நாட்டில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,673 பேரிடமிருந்து உறுப்பு தானம் பெற்று 10,003 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை.
2008-இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல், சிறுகுடல், கணையம் தானமாகப் பெறப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. சில அரிதான நிகழ்வுகளில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மும்பை, குஜராத், தில்லியில் இருந்து இருதயம், நுரையீரல் தானமாகப் பெறப்பட்டு சென்னையில் சிகிச்சை. இந்தியாவிலேயே 10,000 உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைச் செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்ந்து அதிகரிப்பு எனத் திட்டத்தின் இயக்குநர் அமலோர்பவனாதன் பெருமிதம்.