health-and-wellness

img

தக்காளி சாஸ் அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம் - சீன அறிவியல் ஆய்வாளர்கள் தகவல் !

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் தக்காளி சாஸினை விரும்பி சாப்பிடுகிறார்கள் . தக்காளி சாஸை சமோசா , சாண்ட்விச் போன்ற துரித உணவுகளுக்கு அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர் . அதுமட்டுமின்றி , நமது ஊர்களில் சில குழந்தைகளுக்குத் தென்னிந்திய உணவுகளான தோசை , இட்லி போன்ற உணவு வகைகளுக்குக்கூடத் தக்காளி சாஸை தொட்டுக் கொண்டு சாப்பிடும் வழக்கம் உள்ளது . 

உலகளவில்  மேற்கொண்ட ஆய்வில் , அமெரிக்காவின் 97 சதவீத வாடிக்கையாளர்கள் தக்காளி சாஸை அதிகம் உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது . அமெரிக்காவுக்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது . 

இந்நிலையில்,  சீன அறிவியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இந்த ஆய்வின் படி ,  தக்காளி சாஸ் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுவதாகவும் ,  இந்த  ரசாயனங்களை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் , இதில் உள்ள அதிக அமிலத்தன்மை சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி , தக்காளி சாஸில் உள்ள ப்ரக்டோஸ்(fructose) , உடல் எடையை அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது .