health-and-wellness

img

இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

புதுதில்லி,நவம்பர்.07- புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த  நவம்பர் மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுவதாலும், பழைய செல்கள் இறக்காமல் இருந்தாலும், அவை ஒன்று சேர்ந்து புற்றுநோய்க் கட்டியாக மாறலாம். புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்டதாகும்
பெண்களுக்கு குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகளவில் ஏற்படுகிறது
புற்றுநோய் பல காரணிகளால் ஏற்படுகிறது மரபணு வழியாக ஏற்படுவது, திடீர் மரபணு மாற்றம் மற்றும் புகைப்பழக்கம் புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவதால் அதிகளவில் ஏற்படுகிறது.
புகைப்பழக்கம் மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நவம்பர் 7ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது