புதுதில்லி:
கோவாக்சின் தடுப்பூசியானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று முதல்கட்ட சோதனைக்கு பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது.
உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர பணியில் பல்வேறு நாடுகளும் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் மூன்று வகையான பார்முலாக்களும் நோய் எதிர்ப்பு சக்தி பலனை அளித்துள்ளன என்றும் ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது. பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம். கோவாக்சின் தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்டமாக மனித உடலில் செலுத்தும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.