headlines

img

சிறப்பாகச் செயல்பட...

பிரதமர் நரேந்திர மோடி மே 11 திங்களன்று காணொலி வாயிலாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்குப் பின்னர் அவர் இவ்வாறு பேசியது ஐந்தாவது முறை. ஆனால் கடந்த நிகழ்வுகளில் சில மாநில முதல்வர்கள்  மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதற்கு சில முதல்வர்கள் புகார் தெரிவித்தனர் என்றும் அதனால் இந்த முறை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பளிக் கப்பட்டது என்றும் நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையில் பிரதமர் மோடி இந்திய ஒன்றி யத்தின் தலைமை அமைச்சர் என்பதையும் முதல் வர்கள் ஒன்றியத்தின் அங்கங்களான மாநிலங்க ளின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் என்ப தையும் அவர் நினைவில் கொள்வதேயில்லை. அதனால் தான் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி யைப் போலவே மாநில முதல்வர்களுடனான கலந்துரையாடலையும் அவர் கையாண்டி ருக்கிறார். 

இந்த நிகழ்வில் கொரோனாவுக்கு எதிரான மாநில அரசுகளின் செயல்பாடுகள் பாராட்டுக்கு ரியவை என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் இந்த பாராட்டுக்குரிய பணிகளுக்காக மாநிலங்களுக்கு எந்த அளவுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்துள்ளது என்பதை நாடே அறி யும். ஆயினும் ஸ்பெஷலாக பிரதமர் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி வசூல் அமோக மாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலி ருந்தோ பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியி லிருந்தோ மாநிலங்களுக்கு உதவி செய்ய பிரத மருக்கு நேரமும் இல்லை; மனமும் இல்லை.

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் கொரோனா தடுப்புப் பணிக்காக கேட்டிருந்த 2வது தவணையை உடனடியாக விடுவிக்க வேண்டு மென்றும், ஏற்கெனவே கேட்டிருந்த ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டுமென்றும், கடன்பெறும் அளவை 33 சதவீதத்திற்கும் அதிகமாக அனுமதிப்பதுடன் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டையும் உடனடியாக வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதன் மூலம் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியிருந்த நிதி உதவி எதுவுமே வழங்கப்பட வில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான அதிகா ரப் பகிர்வை ஒருபோதும் குறைக்கக்கூடாது என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000 கோடியை விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை நீண்டுகொண்டே செல்கிறது.

தமிழக முதல்வரைப் போலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும், மாநில அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் பற்றி பேசியிருக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வரும் கூட மாநில அரசுகளுக்கு முக் கியத்துவம் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தி யிருக்கிறார். கேரள முதல்வர் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார்.

எனவே மாநிலங்களின் அதிகாரத்தை  பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடாமல் இருப்பதே மாநிலங்களின் சிறந்த செயல்பாட்டுக்கும்நாட்டின் கூட்டாட்சி மாண்புக்கும் ஏற்றதாக அமையும்.

 

;