headlines

img

வேதனையளிக்கும் விலை உயர்வு

வெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். இப்போது வெங்காயத்தின் விலை யைக் கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும். அந்த அளவுக்கு, வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தில்லி உள்ளிட்ட நகரங்களில் சராசரியாக ரூ.40 முதல் 50 வரை இருந்த வெங்காயத்தின் விலை தற்போது ரூ.70 முதல் 80ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.   2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பருவ மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதி கரித்தது. அதன்பின்னர் மீண்டும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில தினங்களில், முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ.100ஐ  தொடும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். 

நாட்டில் அதிகமாக  வெங்காயம்  பயிரிப் படும் இடம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் இதர மாநிலங்க ளில் விளைச்சல் செய்யப்படும் வெங்காயம், நாசிக்கின் மிகப்பெரிய வெங்காயச் சந்தைக்கு வரும். அங்கிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது வெங்காயத்தின் விலை வெகுவாக உயரக் காரணம் பருவமழை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆண்டுதோறும்  ஜூன் முதல் செப்டம் பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். அதனால் வெங்காய விளைச்சல் பாதிக் கப்பட்டு விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. அப்படியே இருந்தாலும் விளைச்சல் அதிக மான காலத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தையிடல் சம்மேளனம் (நாபெட்) முன்கூட்டியே போதுமான அளவு வாங்கி இருப்பு வைத்திருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.

கட்டுப்படியான விலை கிடைக்காததாலும் வெங்காய விதைகள் அழுகியதாலும் கடந்த ஆண்டு நாசிக்கில் விவசாயிகள் வெங்காய விதைகளை பயிரிட முடியாமல் சாலையில் வீசி எறிந்தனர். வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது குறித்து அரசுக்கும் வலியுறுத்தினர். ஆனால், அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.விளைவு வெங்காய விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெங்காய திருட்டு அதிகரித்துள்ளது. மதிப்புமிக்க பொருளாக வெங்கா யம் மாறிவிட்டது என்பதையே அது காட்டுகிறது. 
 

விலை உயர்வை அடுத்து, உள்நாட்டு சந்தை களில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்த போது ஊழல் நடந்தது.  எனவே அதுபோன்று இனி யும் நடைபெறாமல் இருக்க நாபெட் நேரடியாக கொள்முதல் செய்து மாநில அரசுகள்   மூலமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலஅரசும் வெங்காயத்தை வெளி மாநிலங் களில் இருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலமாக குறைந்த விலைக்கு விற்க முன்வரவேண்டும். வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் போது அதனை கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டு நிதியை இதற்கு பயன் படுத்தவேண்டும்.

;