headlines

img

அடாவடித்தனம்...

மகாராஷ்டிராவில்  அரசமைப்புச் சட்டத்தை மீறி அடாவடித்தனமாக ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயக மாண்புகளைக் குலைத்து ஒற்றைக் கட்சி எதேச்சதிகாரத்துடன் மோடி அரசு ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் நகர்த்தி வருகிறது. 

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் பாஜக தான் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக மாநில ஆளுநர்களையும் தங்களின் கையாட்க ளாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்த்திப் பிடிக்கிற ஜனநாயக மாண்புகளை அரசு நிர்வா கத்தைக் கொண்டே அழித்தொழிக்கும் வேலை யாகும். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றிருந்தது. ஆனால்  யாருக்கு முதல்வர் நாற்காலி என்ற போட்டியில் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதற்கிடையே சிவசேனா வில் இருந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மேற்கொண்ட முயற்சியும்  பாஜகவிற்கு தோல்வியையே கொடுத்தது. இரு கட்சிகளும் மத வெறியை கைக்கொண்டுள்ள கட்சிகள் என்ற போதிலும் மாநில கட்சிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற பாஜகவின் செயல்திட்டம் அங்கு சிவசேனாவையும் தள்ளி வைக்கவே செய்தி ருக்கிறது.

வழக்கம் போல் மோடி அரசு,  மகாராஷ்டிரா விலும் மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிவை தனது கையாளாக்கி மற்ற கட்சிகளை ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறது. குறிப் பாக, உச்சநீதிமன்றம் ஏற்கனவே மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு எதி ராக மாநில ஆளுநர் செயல்பட்டிருக்கிறார். 

மேற்கண்ட தீர்ப்பின்படி, ஒரு அரசின் பலம் என்பது பகிரங்கமாக சபையில் நிரூபிக்கப்பட வேண்டும்; அப்படி சபையில் பலத்தை நிரூபிப்ப தற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கு மாறாக ஒரு வழியை தேர்ந்தெடுக்க முடியாது; ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரின் திருப்தி தொடர்பான விசயமாகவும் இது இருக்க முடியாது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு உரிய எண்ணிக்கையுடன் கூடிய பட்டியலை கொண்டு வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நவம்பர் 12 இரவு 8.30 மணி வரை காலக்கெடு அளித்த அதே ஆளுநர், அதற்கு முன்பே அராஜகமாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்புகிறார். 

அதே போல் பாஜகவிற்கு ஆட்சியமைக்க 48 மணி நேரம் கொடுத்த ஆளுநர், சிவசேனாவிற்கு 24 மணி நேரம் மட்டுமே கொடுத்தார். அந்த 24 மணி நேரமும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கவில்லை. ஆளுநரின் இந்த நட வடிக்கை  இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதி ரான  நடவடிக்கை ஆகும். இப்படி குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. கோவா, கர்நாடகா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒன்று, குதிரை பேரம் நடத்தி மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது அல்லது கட்சியையே விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பது என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறது. மகா ராஷ்டிராவில் நடந்திருப்பது இந்திய ஜனநாய கத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.

 

 

;