headlines

img

ஜக்கிக்காக சட்டத்தை வளைப்பதா?

அரசின் விதிமுறைகளை மீறி ஜக்கி வாசு தேவின் ஈஷா யோகா மையம் எழுப்பியிருக்கும் கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவ திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. இது ஜக்கிக்காக சட்டத்தை வளைக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.  

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதி ஏற்க னவே மலைப்பாதுகாப்பு பகுதி என  அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்குள் எந்த ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றாலும் அதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனு மதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டும். ஆனால் ஜக்கிவாசு தேவ் எந்த அனு மதியையும் பெறவில்லை. 2012இல் கோவை வன அலுவலர் விதிமுறை மீறல்களைச் சுட்டிக் காட்டி ஈஷாவின் கட்டுமானத்திற்கு விளக்கம் கேட்டிருந்தார். 2013இல் விதியை மீறிக் கட்டப் பட்டிருந்த 1,44,000 சதுர மீட்டரில் இருந்த 60 கட்ட டங்களை இடிக்க அரசால் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. நீதிமன்றமும் இடிக்க உத்தரவிட்டது. 

ஆனால் அதையெல்லாம் ஜக்கி மதிக்க வில்லை. நீதிமன்ற உத்தரவையும் மீறி சொகுசு குடியிருப்புகள், தீர்த்த குண்டங்கள், தியான மண்டபங்கள், நடைபாதை, அலங்கார தோட்டம், விளையாட்டு மைதானம், வாகன நிறுத்துமிடம் என 4,27,700.00 ச.மீட்டருக்குச் சட்டவிரோதமா கக் கட்டிடங்களை எழுப்பியிருக்கிறார். வழக்கு நிலு வையிலிருந்தும் நீதிமன்றமும், அரசு நிர்வாகமும் எப்படி அனுமதித்தது? அதன் பின்னணியில் யார் இருந்தது என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என  ஈஷாவிற்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. உடனே பதறியடித்துக் கொண்டு ஒன்றிய மோடி அரசு ‘’கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காகக் கட்ட டங்களைக் கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று உயர் நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

அது எப்படி சொகுசு குடியிருப்புகள், தியான மண்டபங்கள், தீர்த்த குண்டங்களும் கல்வி நோக் கத்திற்கானது என மோடி அரசு கண்டுபிடித்தது என்பது தெரியவில்லை. அப்படியென்றால் இனி நேரடியாக மலை பாதுகாப்பு பகுதிக்குள் பள்ளி,  கல்லூரிகளைக் கட்டிக் கொள்ளலாமா? அதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லையா? என்பதை ஒன்றிய அரசு விளக்கிட வேண்டும். 

பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்து அவர்களது உடைமைகளை தானம் என்ற பெயரில் பறிப்பதும்; ஒரு சந்ததியின் எதிர்கால கனவை ஆன்மீகம் என்ற பெயரில் கருகச் செய்வ தும்தான் பாஜக அகராதியில் கல்விப்பணியா? மகாசிவராத்திரியில் ஈசனுடன் ஓர் இரவு என ரூ.500 முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்து கல்லா கட்டுவதும் கல்விப்பணியோ? ஆர்எஸ்எஸ் ஆதரவு ஜக்கிக்கு முட்டுக்கொடுக்க, ‘’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ எனும் அரசியல் சாசனத் தின் பிரிவு 14 ஐ சமாதியாக்க மோடி அரசு முயல்வதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

 

 

;