headlines

img

வழிகாட்டும் பீகார்!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய மோடி அரசு பிடிவாதமாக மறுத்து வரும் நிலையில், மோடி அரசுக்கும், நாட்டிற் கும் வழிகாட்டும் விதத்தில் பீகார் அரசு மாநில அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முடி வுகளையும் வெளியிட்டுள்ளது. அந்த விப ரங்கள் இந்திய சமூக அமைப்பில்  பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டி யல் சாதி மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகப் பெருவாரியாக இருப்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. 

பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இவர்களில் இந்துக்கள் 82 சதவீதம்; இஸ்லாமியர்கள் 17.7 சதவீதம். 

சாதிவாரியாக வெளியாகியுள்ள விபரங்க ளின்படி, யாதவர்கள் 14.26%; ரவிதாஸ் மற்றும் சாமார்கள் 5.2%; கோயரி 4.2%; பிராமணர்கள் 3.65%; ராஜபுத்திரர் 3.4%; முசார் 3.08%; பூமிகார் 2.86%; குர்மி 2.8%; மல்லா 2.60%; பனியா 2.31%; காயாஸ்த் 0.60%- என தெரிய வந்துள்ளது. 

இதன்படி கணக்கிட்டால் பிற்படுத்தப்பட்ட வர்கள் 27%; மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 36%; பட்டியலினத்தவர் 19%; பழங்குடியினர் 1.6%; பொது பிரிவினர் 15%.

இதுதான் இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாநிலத்தின் மக்கள்தொகையில் சாதிவாரி நில வரம். ஆனால் பீகார் உள்பட அனைத்து மாநி லங்களிலும் மக்கள் தொகை நிலவரத்திற்கேற்ப பொருத்தமான முறையில் இடஒதுக்கீடு அம லாகவில்லை. இந்த கணக்கெடுப்பு நாடு முழு வதும் நடந்தால் அந்த விவரங்களும் ஆய்வுக ளும் எதிர்காலத்தில் அரசாங்கங்களின் கொள் கைகளையும், நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளையும் பொருத்தமான விகி தாச்சாரத்தில் மேற்கொள்வதற்கு உதவியாக அமையும். ஆனால் அதைத் தடுப்பதற்குத்தான் பாஜக அரசு முயற்சித்து வருகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத் தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியா கவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

1881 முதல் 1941 வரை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப் பட்டுள்ளது. அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்த வேண் டிய அவசியம் எழுந்துள்ளது. அதிக எண்ணிக் கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மற்றும் பழங் குடியினருக்கு நியாயமாக சென்றடைய வேண் டிய சமூக நீதி இதன்மூலமே உறுதி செய்யப் படும் என்பதை பீகார் கணக்கெடுப்பு உணர்த்து கிறது.