ஐந்து மாநிலத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியை கொஞ்சம் நிதானமற்ற நிலைக்கு கொண்டு வந்திருப்பது போல் தெரிகிறது. அவரது பேச்சுகள் அப்படித்தான் உணர்த்துகின்றன. பஞ்சாப் மாநிலத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் திங்களன்று தேர்தல் பிரச்சாரத்தில் நிகழ்த்திய அவரது உரைகள் ஏற்கெனவே சொல்லப்பட்ட வாக்குறுதிகளை மிஞ்சும் வண்ணம் அமைந்துள் ளன. ஆனால் அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா என்பது பற்றி அவர் எந்தக் கவலையும் படவில்லை என்றே தெரிகிறது.
பாஜகவின் பொதுவான நடைமுறை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய வாக்குறுதிகளையும் வழங்கலாம்; வெற்றி பெற்றதும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் என்பதே. அந்த வழியிலேயே, பஞ்சாப் மக்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு நான் ஒரு வாக்கு றுதியை அளிக்கிறேன். இனி உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆண்டு க்கு இரண்டு கோடி வேலைகளை வழங்குவோம் என்று கூறினார். ஆனால் எட்டாண்டு ஆகியும் அதை செயல்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, இருக்கிற வேலைவாய்ப்பையும் பறிக்கிற வேலை யையே செய்து கொண்டிருக்கிறார். அத்துடன் நல்ல காலம் பிறக்குமென்றும் கூறினார். ஆனால் அது நாட்டு மக்களுக்கு அல்ல, அவரது நட்பு வட்டாரத்தினருக்கே என்பதை நாடறியும்.
அத்துடன், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கடைப்பிடித்த மோசமான கொள்கை களால் இன்று தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவருக்கு அருகிலேயே காங்கிரஸ் ஆட்சியில் அண்மைக் காலம் வரை முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் இருக்கிறார் என்பதை மறந்து விட்டார் போல.
அதுபோல் கான்பூரில் கூட்டத்தில், உத்தரப்பிர தேசத்தில் விஷமிகள், ரவுடிகள் கலவரத்தில் ஈடுபடுவோர் ஆகியோரின் மனங்களில் மாநில அரசு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலத்தில் உள்ள சிறுமிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உத்தரப்பிரதேசத்திற்கு யோகி பயனளிக்கிறார் என்று கூறுகின்றனர் என்றும் பேசியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்தான் உன்னாவ், ஹாத்ராஸ் சம்பவங்கள் நடந்தன என்பதையும் அங்கு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக் கப்பட்ட 23 வயது, 19 வயது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் அவர்களது இறப்பு க்கும் காரணமாக இருந்தவர்களுக்கு யோகி அரசாங்கம் எந்தளவு பயன்பட்டது என்பதை அந்த மாநில மக்கள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவர். உன்னாவில் பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்ய கார் விபத்தை ஏற்படுத்தி குடும்பத்தினர் இருவரது உயிரை பறித்த தும் அவரும் வழக்கறிஞரும் படுகாயம் அடைந்த தும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களில் ஈடு பட்ட குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் அவர்க ளின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதற்குமே யோகி செயல்பட்டார் என்பதை மறைத்துவிட்டு மோடி அளந்துவிட்டிருக்கிறார். இன்னுமா அவரை நாட்டு மக்கள் நம்புவார்கள்?