headlines

img

மற்றும் மூன்று விரல்கள்

குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் படாதபாடுபடுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு செய்வது முதல் ஒவ்வொன்றிலும் சாதகமான நிலைகளை ஏற்படுத்துவதற்காக தலையால் தண்ணீர் குடிக்கிறார்கள். 

பதவிபடுத்துகிற பாட்டில் எப்படியாவது வென்றாக வேண்டுமென்கிற எண்ணத்தில் ஏதேதோ பிதற்றவும் செய்கிறார்கள். புதனன்று மேசனா நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி, மதவெறி, சாதிவெறி என்ப வையாகும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதிலும் அதிகாரத்தில் இருப்பதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதிலும் அவர்கள் பெயர் பெற்றவர்கள் என்றும் பேசியிருக்கிறார்.

இவை யாவும் இவருக்கும், இவரது கட்சியி னருக்கும் பொருந்தாது என்பதுபோல, சுத்த சுயம் பிரகாசம் போல பேசியிருக்கும் மோடி குஜராத்தில் 2002இல் நடந்ததை அந்த மாநில மக்களும் நாட்டு மக்களும் மறந்திருப்பார்கள் என்றே நினைத்திருக்கிறார் பாவம். 

‘சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா’ என்ற திரைப்படப் பாடலே நினைவுக்கு வருகிறது. இவர்களது ஆட்சி யில் ஊழல் என்பதே நடவாதது போல நடிக்கிறார். நாட்டின் பாதுகாப்பு துறையிலேயே மிகப் பெரிய ஊழலை ரபேல் விமான கொள்முதலில் செய்து விட்டு நீதிமன்றத்திற்கும் பெப்பே காட்டியவர்கள் தானே நீங்கள். அண்மையில் 5ஜி ஏலமிடுவதில் நடந்ததன் பெயர் என்ன? 

இதுதவிர கர்நாடக மாநிலத்தில் சதவீத அடிப்படையில் பணம் பெறும் நடைமுறை நாடு முழுவதும் சிரிக்கிறதே. பொதுத்துறை நிறுவனங்க ளை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பாஜகவுக்கு தேர்தல் நிதி வந்து சேர்கிறதே, இதன் பெயர் என்ன? 

சாதிவெறி, மதவெறி என்று காங்கிரசை குற்றம் சாட்டும் முன் தங்கள் கட்சியினர் குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதும் செய்து கொண்டி ருப்பது என்ன என்பதை மக்கள் அறிய மாட்டார் களா? பொய் சொல்வது என்றாலும், பொருந்தச் சொல்ல வேண்டும். ஆனால் அதையே ஓங்கிச் சொன்னால் உண்மையாகிவிடும் என்கிற உங்க ளது பாசிச பாணியிலான ஹிட்லர் வழியிலான நடைமுறையை எத்தனை காலம்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

குடும்ப ஆட்சி என்றும் வாரிசு அரசியல் என்றும் காங்கிரசை சாடும் மோடி தற்போது குஜ ராத்தில் வேட்பாளராக நிற்பவர்களில் 18 பேர் வாரிசுகள் என்பதை மறந்துவிட்டாரா என்ன?  மக்களிடையே மதம், சாதி, மொழி, பண்பாடு  அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துகிற நடை முறையை பின்பற்றிக் கொண்டு இந்துத்துவா ஒற்றை தன்மையை திணிப்பவர்களை குஜராத் மக்கள் கட்டாயம் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி.

;