headlines

img

அக்னி பாதையும் ஆளுநரின் வேண்டாத வேலையும்

இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவில் மண் அள்ளிப் போடும் வகையிலும் தேசப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னி பாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர் கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளை ஞர்களை பணியமர்த்தும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாநிலங்களில் பெரும் போராட்டம் எழுந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

திங்களன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகி யுள்ளார். மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ள னர். ஆனால் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை வாபஸ் பெற மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. 

ஒன்றிய அமைச்சர்கள் மட்டுமின்றி பாது காப்புத்துறை கூடுதல் செயலாளர் லெப்டினண்ட் அனில் பூரி இந்தத் திட்டத்தை வாபஸ் பெற முடி யாது என்று கூறியுள்ளார். பொதுவாக ஒன்றிய அரசின் நிர்வாக ரீதியான முடிவுகள் குறித்து ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் அனில் பூரி இத்தகைய கருத்தை வெளி யிட்டுள்ளது அத்துமீறலாகும். மறுபுறத்தில் ஓய்வு பெற்ற பலர் ராணுவ உயரதிகாரிகள் கூட்டாக இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் தன்னு டைய பொறுப்பை மறந்து ஒரு ஆர்எஸ்எஸ் காரர் போலவே பல்வேறு தருணங்களில் பேசி வருகிறார். சமீபத்தில் சனாதன தர்மம் தான் இந்தியாவை உரு வாக்கியது என்று கொஞ்சம் கூட வரலாற்றுப் புரிதல் இல்லாமல் உளறினார்.

மாநில அரசு ஏற்றுக் கொள்ளாத புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து அனுதினமும் பேசி வரு வதோடு மட்டுமின்றி அன்றாடம் ஆதரவுக் கூட் டங்களையும் நடத்தி வருகிறார். இந்தப் பின்னணியில் அக்னி பாதைத் திட்டத்தை ஆதரித்து அவர் பேசுவது அத்துமீறலாகும்.

இந்தத்திட்டத்தை தமிழக அரசு எதிர்த்துள் ளது. ஆனால் அதை ஆதரித்துப் பேசுவதன் மூலம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயல்வதோடு இளைஞர்களை திசை திருப்பவும் முயல்கிறார். 

வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெற மறுத்து மோடி அரசு முரட்டுப் பிடிவாதம் பிடித்தது. இப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என அடம்பிடிப்பதன் மூலம் நாட்டை அமளிக்காடாக்குவது மோடி அரசுதான். இளை ஞர்களின் போராட்டம் காரணமாக 700 கோடி  ரூபாய் அளவிலான சொத்துக்கள் சேதமாகியுள்ளன. பல்வேறு வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தலைநகர் தில்லியிலும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள் ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோசனைப் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த விபரீதத் திட்டத்தை எதிர்ப்பது தேசபக்தக் கடமையாகும்.

;