headlines

img

ரத்தம் குடிக்கும் ‘இரட்டை எஞ்சின்!’

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிர் பிழைத்து 13 வயது சிறுவனுடன் தாயும், அவரது உறவினரும் சென்றிருக்கின்றனர். அப்போது வழிமறித்த கும்பல் கொஞ்சமும் இரக்கமின்றி  சொந்த இனம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக 3 பேரையும் காவல்துறை கண்முன்னே உயிரோடு எரித்துக் கொன்றி ருக்கிறது. 

மேலோட்டமாக பார்த்தால் இரு இனத்தின ருக்கு இடையே நடைபெறும் கலவரம் போல் தோன்றும். ஆனால் இந்த  வன்முறை முழுக்க 2008இல் ஒடிசாவின் கந்தமாலில் சங்பரிவார் அமைப்பினர் அரங்கேற்றிய அதே வன்முறை பாணியிலேயே நடப்பது தெரிய வந்திருக்கிறது.   இதுவரை 317தேவாலயங்கள், 70 கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 

மணிப்பூரின் மக்கள் தொகை 38 லட்சம்.  அதில் மெய்டெய் சமூகத்தினர் 53 சதவிகிதம்; நாகா, குக்கி,மிஸோ உள்ளிட்ட 34 உட்பிரிவுக ளையும் கொண்ட பழங்குடிமக்கள் 30 சதவிகி தம். மணிப்பூர் இந்தியாவுடன்  இணைவதற்கு முன்பு மெய்டெய் சமூக அரசர்களின் கட்டுப் பாட்டிலிருந்து வந்தது. தற்போது மொத்தமுள்ள 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே பெரும்பான் மை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக மெய்டெய் சமூகம் இருந்து வருகிறது. குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் பெரும்பகுதி கிறிஸ்த வர்களாக இருக்கின்றனர். மெய்டெய் சமூ கத்தைச் சேர்ந்த 2 லட்சம் பேர் கிறிஸ்தவர்களா கவும் இருக்கின்றனர்.

இந்தச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன் படுத்தி பழங்குடி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரும்பான்மை மெய்டெய் சமூகத்தி னரை தன் பக்கம் ஈர்க்க திட்டமிட்டது பாஜக. அதன் படி நாங்கள் ஆட்சியமைத்தால் மெய்டெய் சமூகத்தினரைப் பழங்குடியின பட்டி யலில் சேர்ப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியையும் பிடித்தது. அதேநேரம்  மறுபுறம் பழங்குடி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் அரம்பை, தெங்கால் மற்றும் மைதீ லிபுன் ஆகிய இந்துத் துவா அமைப்புகளை உருவாக்கி மத ரீதியான பிளவை ஏற்படுத்தி கலவரத்தில் இறக்கியி ருக்கின்றனர். 

இந்த கலவரத்தில் திட்டமிட்டு குக்கி இன  பழங்குடி மக்களின் வீடு ஒவ்வொரு பகுதியாக அழிக்கப்படுகிறது. அங்கிருந்து வெளியேற்றப் படுகின்றனர். காவல்துறை கமாண்டோக்களும் அவர்களுடன் இணைந்து பழங்குடியினருக்கு எதிராக இன அழிப்பை நடத்துகின்றனர். இதற்கு முதல்வர் பைரன்சிங்தான் காரணம்; தேர்தலுக்கு முன்பே குக்கி இன மக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் மதவெறி பிரச்சா ரத்தை மேற்கொண்டார் என்று பாஜக எம்எல்ஏ  பவோலியன்லால் ஹவோ கிப் கூறுகிறார். இதுதான் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியின் உண்மை முகம்.

;