headlines

img

பொறுப்பாய் இருங்கள்!

நாடாளுமன்றத்தில் அதிகம் பேசாத- அவை நடவடிக்கைகளில் பங்கேற்காத பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வெளியில் பேசுவ தில் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது திங்க ளன்றும் தெளிவானது. அப்போது நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை போல மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். 

பொறுப்பாக நடந்து கொள்வது எதிர்க்கட்சிக ளுக்கு மட்டும் தானா? ஆளும் கட்சிக்கு இல்லையா? ஆளும் கட்சி பொறுப்பின்றி, தறி கெட்டு நடந்து கொள்ளும் போது அதனைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் தானே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியது தானே உங்களது அரசின் பாசிச பாணி நடவடிக்கை.  

ஆனால் உங்களது அரசின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுவதற்கா கவே மக்கள் தனிப் பெரும்பான்மை வழங்காமல் தண்டனை வழங்கியிருக்கின்றனர். கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியை நடத்த வேண்டிய நிலையிலும் கூட மூன்றாவது முறை யாக ஆட்சியமைத்திருப்பதாகப் பெருமைய டித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை முறை ஆட்சியமைத்தோம் என்பதில் பெருமையில்லை; எத்தகைய முறையில் ஆட்சி புரிந்தோம் என்பதி ல் தான் பெருமை.

வேளாண் விரோத சட்டங்களை கொண்டு வந்ததால் நாட்டின் தலைநகரமே விவசாயி களால் முற்றுகையிடப்பட்டதும் ஓராண்டுக்கு மேலான தியாகப் பெருஞ்சமரால் அந்தச் சட்டங்க ளை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்ட தும் உங்கள் ஆட்சியின் கருப்புப் பக்கங்களில் சில. மூன்றாவது முறையாக மக்கள் தேர்ந்தெடுத்த தால் மூன்று மடங்கு பொறுப்பு அதிகரித்துள்ள தாகக் கூறியுள்ளீர்கள். உண்மை தான், பிரேக் இல்லாத வாகனம் போல் கடந்த இரண்டு ஆட்சிக்  காலத்திலும் செயல்பட்டதற்கு மக்கள் தற்போது தகுந்த ‘ஸ்பீடு பிரேக்’ போட்டுள்ளனர். எனவே பொறுப்பை உணர்ந்து ஆட்சியை நடத்த முயற்சியுங்கள். அதுவே மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அமையும்.

ஆனால் தங்களது பேச்சு அத்தகையதாகத் தெரியவில்லை. 50 ஆண்டுக்கு முந்தைய அவசர நிலையைக் குறிப்பிட்டு நாடே சிறைச்சாலையா னது என்று கூறியிருக்கிறீர்கள். உங்களது ஆட்சி அறிவிக்கப்படாத அவசர நிலையாகத் தானே இருந்தது. மாநில முதல்வர்களைக் கூட உங்களது மத்திய அமைப்புகளால் கைது செய்து சிறையில் தள்ளி னீர்கள். பத்திரிகை ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்களையும் விட்டு வைக்கவில்லையே! அதனால் தானே எதிர்க்கட்சி கள் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்து உங்களுக்கு உண்மையை உணர்த்துகின்ற னர். எனவே இந்த முறையாவது ஆட்சியில் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். அதையே நாட்டு மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 

 

;