கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல் பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிரா மங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்துள்ளன.
இதற்காக சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர் களை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிர்வாகமும் அழித்திருப்பது அராஜகமாகும். விவசாயிக ளும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரி வித்த பிறகும் அதுபற்றி கவலைப்படாமல், சேத மடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக என்.எல்.சி நிர்வாகம் பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டுகிறது.
என்.எல்.சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். மின் உற்பத்திக்கு விரிவாக்கம் அவசியம் என்றாலும் அது விவசாயிகளையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும், மேலும் நிலம் வழங்கும் குடும்பங்கள் கோரும் கூடுதல் இழப் பீட்டை வழங்க முடியாது, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரத் தன்மையுள்ள வேலை வழங்க முடியாது என்று என்.எல்.சி நிர்வாகம் சொல்வது சரியல்ல.
கடந்த காலங்களில் என்.எல்.சியுடன் விவசா யிகளுக்கு கசப்பான அனுபவம் உள்ளதால் தான் இத்தகைய திட்டங்களுக்கு விவசாயிகளிடமி ருந்து எதிர்ப்பு வருகிறது. ஏற்கெனவே விரிவாக் கத் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை நிர்வாகம் உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் நிர்வாகத்திற் கும் விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டிருக் காது. விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் விளை நிலங்களில் சாகுபடி செய்யப் பட்டுள்ள நெற்பயிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டும் செயல் அடாவடித்தனத்தின் உச்சமா கும். இதை அனுமதிக்க முடியாது. இத்தகைய அராஜகத்திற்கு காவல்துறை துணைபோவது சரியல்ல.
நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கை களை என்எல்சி நிர்வாகம் பரிசீலிக்கவேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், குடும்பத்தில் ஒருவ ருக்கு என்எல்சியில் நிரந்தரத் தன்மையுடைய வேலை வழங்க வேண்டும். பிரச்சனைக்கு சுமூ கத்தீர்வு எட்டப்படும் வரை சாகுபடி பயிர்களை அறுவடை செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதுவரை விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை என்.எல்.சி நிர்வாகம் கைவிட வேண்டும்,