headlines

img

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!

இந்திய குடிமக்களின்  அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால் அரசே அடிப்படை உரிமைகளை மறுக்கும் போது அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது. 

2017 -இல் மோடி அரசு எந்தவொரு அதிகார மையத்தாலும் சரிபார்க்க இயலாத வகையிலும்; தேர்தல் நடைமுறையில் சமவாய்ப்பை முற்றிலும் சீர்குலைக்கும் முறையிலும்  தேர்தல் பத்திர திட் டத்தை அறிவித்தது.  அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போதே  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கு 2 வருடம் கடந்த பின்னரே விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர் ரஞ்சன் கோகோய் தலைமை நீதி பதியாக இருந்த வரை விசாரணைக்கு பட்டியலிடப் படவில்லை.

அதன் விளைவு 2017க்கு பின்னர் கார்ப்பரேட்க ளின் வரி படிப்படியாக 35 விழுக்காட்டிலிருந்து 23 விழுக் காடாக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரு நிதி யாண்டில் மட்டும் அரசிற்கு ரூ.6.27 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பலனாக பாஜகவிற்கு 2019- 2020 நிதியாண்டில் மட்டும்  தேர் தல் பத்திரம் மூலம்; மொத்த அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில்  பாஜக 76 விழுக்காட்டை, அதாவது ரூ.2606 கோடியை பெற்றிருக்கிறது.  இது எப்படி தேர்தலில் சமவாய்ப்பையும் ஜனநாயகத்தை யும் பாதுகாக்கும்?

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 2019 இல்  அரசியலமைப்பிற்கு விரோதமாக, ஒரு தலைபட்ச மாக ஒன்றிய பாஜக அரசு நீக்கியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் 2020ல் அன்றைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலை மையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்  விசாரணையை விரைவு படுத்தக்கோரி சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் யூசுப்தாரிகாமி மனுதாக்கல் செய்தும் 6 மாதம் ஆகி விட்டது.  ஆனால் இதுவரை விசா ரணை இல்லை. இது எந்த வகையில் காஷ்மீர் மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்?

அதே போல் 2019 இல் குடியுரிமைக்கு ‘மதத்தை’ அடிப்படையாக வைத்து குடியுரிமை சட்ட திருத் தம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற 14ஆ வது சட்ட பிரிவிற்கு எதிரானதுமாகும்.இந்த சட்ட திருத் தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதுவரை உச்ச நீதிமன்றத்தில் 143 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வழக்கு விசாரணை 2020இல் 3 முறை மட்டுமே நடைபெற்றது. 2021இல் ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. இது குடியுரிமையை மட்டு மல்ல, அனைத்து  அடிப்படை உரிமைகளையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. 

ஆனாலும், விவசாயிகள் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக  நீண்ட  வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி நீதியை மீட்டிருக்கின்றனர். அடிப்படை உரிமைகள் சார்ந்த  பல முக்கியத்து வம் வாய்ந்த வழக்குகளை கிடப்பில் போட்டிருப் பது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. உடனே விரைந்து  விசாரித்து தீர்வு காணப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்.

;