பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது, ஜனநாயகக் கொள்கைகளை வலுப் படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறியுள்ளார்.
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி பேசும் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது பாடத்திட்டத்திலிருந்து ஜன நாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களை நீக்கி அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க - ஆசியாவில் இஸ்லாமிய பேரரசு களின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகிய பாடங்களையும் நீக்கியிருக்கிறது.
11, 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள இந்தப் பாடங்கள் வரும் கல்வியாண்டு முதல் (2022-23) மாணவர்களுக்கு சொல்லி தரப்பட மாட்டாது. அத்துடன் உருதுக் கவிஞர் பயஸ் அகமது என்பவரின் இரண்டு கவிதைகள் மத வகுப்புவாதம் மற்றும் அரசியல் வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்றிருந்த பாடங்க ளும் இனிமேல் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மோடி தலைமையில் பாஜக அரசு பதவி யேற்ற நாளிலிருந்து நாட்டின் ஜனநாயகத் தன்மை யையும், மதச்சார்பின்மையையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணமே செயல்பட்டு வருகிறது. ஆனால் பேச்சிலோ மிகப் பெரிய ஜனநாயக வாதி போல் காட்டிக் கொள்வதில் அவரை மிஞ்ச வேறு ஆளில்லை.
ஏற்கெனவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்குகிற சமயத்தில் அனைத்து விசயங்கள் பற்றியும் விவாதிக்க தயாராக உள்ளோம் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறிவிட்டு உள்ளே எதிர்க்கட்சியினர் பேசுவதற்கே அனு மதிக்காத காரியத்தையே செய்தனர். இது அவர்க ளது வழக்கமான, சொல்லொன்றும் செயல் ஒன்று மான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்திருந்தது.
கடந்தாண்டு சிபிஎஸ்இ 11ஆம் வகுப்பு அரசி யல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பின்மை போன்ற பாடங்கள் நீக்கப்பட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது. இது அதற்கு முந்தைய ஆண்டு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங் கும் நடைபெற்ற கிளர்ச்சிகளின் பின்னணியி லேயே நிகழ்ந்தது.
பொதுவாக ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு, இந்திய நாட்டை அதன் பாரம் பரியத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை, பன் முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை ஒழித்துவிட்டு இந்துத்துவா ஒற்றைத்தன்மை கொண்ட இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முயற் சித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியா கவே ஆண்டுதோறும் பாடத்திட்டங்களிலிருந்து இந்தியாவின் மாண்பாகப் போற்றப்படும் பண்பு களை அழித்துவிட துடித்து இத்தைய காரியங்க ளில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. இது முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியம். அதுவே நாட்டின் பாரம்பரியத்தை காத்திடும்.