headlines

img

ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கை

உக்ரைன் போரின் ஆறு மாத கால நட வடிக்கைகளுக்குப் பிறகு, உக்ரைனில் ரஷ்யர்கள் அதிகமாக வசிக்கும் டோனட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபரோஜியே மற்றும் கெர்சான் ஆகிய பிரதேசங்களை, அந்த பகுதி மக்கள் பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையாக ரஷ்யாவுடன் இணைந்து கொள்ள ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் கடந்த வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கிரெம்ளின் மாளிகையில் நடந்து முடிந்திருக்கிறது.

போரில் ரஷ்யா தோல்வி அடைந்து பின்வாங்கிவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சக்திகள் பிரச்சாரம் செய்து கொண்டி ருந்த நிலையில் உக்ரைனின் நான்கு பிரதேசங் கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டிருப்பது மேற்கத்திய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. அது ஒருபுறமிருக்க இந்த நிகழ்வின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆற்றிய உரை ஒட்டுமொத்த மேற்கத்திய ஏகாதி பத்திய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுவதாக அமைந்துள்ளது. தனது உரையில், 1991ல் சோசலிச சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, இனி இந்த உலகில் தங்களை  எதிர்க்க யாரும் இல்லை என மேற்கத்திய ஏகாதி பத்திய சக்திகள் இறுமாப்பு கொண்டிருந்தன. அதை ரஷ்யா தகர்த்தெறிந்திருக்கிறது” என்று  புடின் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஒட்டுமொத்த ரஷ்யாவையும் தகர்த்துவிடலாம்; இந்த உலகமே  தங்களது சர்வாதிகாரத்தின்கீழ் வந்துவிடும் என்ற எண்ணத்தோடு மேற்கு உலகம், ஒரு  புதிய நவீன காலானியாதிக்க கட்டமைப்பை  உருவாக்க முயற்சிக்கிறது; அந்தக் கட்டமைப் பின் மூலமாக உலக நாடுகளையெல்லாம் ஒட்டுண்ணியாக உறிஞ்சி இரத்தம் குடிக்க முயற் சிக்கிறது; டாலரின் ஆதிக்கம், தொழில்நுட்ப ஆதிக்கம் ஆகியவற்றின் மூலமாக உலகை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவர முயற்சிக் கிறது; உலக நாடுகளின் இறையாண்மையை முற்றாக சீர்குலைக்கவும், சுதந்திர நாடுகள் அனைத்தையும் தங்களது ஆக்கிரமிப்பின் கீழ்  கொண்டுவரவும், உலகின் பன்முக - உண்மை யான கலாச்சாரங்களையும் மாண்புகளையும் சீர்குலைத்து தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும், உலகின் அனைத்து நாடுகளது இறையாண்மையையும் தனது காலடியின் கீழ் சரணடையச் செய்யவும் அமெரிக்க ஏகாதி பத்தியம் முயற்சிக்கிறது; ரஷ்யா அதை ஒரு  போதும் அனுமதிக்காது என்று முழங்கியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே வேளையில் அந்தப் போருக்கான ரஷ்யாவின் காரணம் சரியானதே என்பதையும் சுட்டிக் காட்டின. போர் நிரந்தரமாக முடிவுக்கு வர வேண்டும். அதேவேளையில், புடின் குறிப் பிட்டது போல ஏகாதிபத்தியத்தின் சதி வலை களை அறுத்தெறிந்து உலகைக் காக்கும் பணி யில் போர் அல்லாத நுட்பமான நடவடிக்கை களில் ரஷ்யா தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

 

;