headlines

img

தமிழகத்தில் பாதிப்பு 738 பேர்

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று

மதுரை, ஏப்.7- தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ள வர்கள் புதன்கிழமை மாலை ஆறு மணி நில வரப்படி 738 பேர் என சுகாதாரத்துறைச் செய லாளர் பியூலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறினார். கொரோனா நிலவரம் குறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 690 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். புதன்கிழமை பாதிக்கப்பட்டவர்கள் 48 பேர். தமிழகத்தில் மொத்தம் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேரில் 42 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். ஏழு பேர் வெளிநாட்டினர். வீட்டுக் கண்காணிப் பில் உள்ளவர்கள் 60,739 பேர். அரசு கண்கா ணிப்பில் உள்ளவர்கள் 230 பேர்.  28 நாட்கள் கண்காணிப்பு நிறைவடைந்தவர்கள் 32,075 பேர் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 344 பேரின் முடி வுக்காக காத்திருக்கிறோம். இன்னும் நாம் மூன்றாம் நிலைக்குச் செல்லவில்லை. செல்லக்கூடாது. அதற்கு அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும்.

புதன்கிழமை நடைபெற்ற ஆய்வில் தேனி யில்  அதிகபட்சமாக 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 12 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள். சென்னையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;