headlines

img

மோசடி நாடகத்தின் இரண்டாம் பகுதி

தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர் கள் ஆலோசனை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறி விப்பில் ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது புதிய கல்விக்கொள்கை தேவையா?  இல்லையா? என்பது குறித்து ஆசிரியர்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்கவில்லை. மாறாக ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்து விட்ட நிலையில் இந்தக் கொள்கை களை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்துதான் ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. 

கேள்வி- பதில் வடிவில் கருத்துக் கேட்பு படிவம் இருக்கும் என்றும் ஒவ்வொரு கேள்வியோடும், புதிய கல்விக்கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும், அதன்மூலம் ஆசிரியர்கள் இந்தக் கொள்கையை முழுமை யாக உள்வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

புதிய கல்விக்கொள்கையில் இடம் பெற்றுள்ள மிகமிக ஆபத்தான ஒரு அம்சம் கல்வியை மாநில பட்டியலிலிருந்து முற்றாக மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு செல்வதாகும். ஆசிரியர்களி டம் நேரடியாக கருத்துக் கேட்பது அத்துமீறல் மட்டுமல்ல, இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஆணவப் போக்கின் அடிப்படையு மாகும்.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான் காவது சமஸ்கிருத மொழியை திணிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு அறிவித்துள்ளதோடு, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்கப் போவதாகவும் அறி வித்துள்ளது.

பல மாநிலங்களில் இந்த கொள்கைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பல்வேறு கல்வியாளர் கள், அறிஞர்கள், படைப்பாளிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இந்த விஷயத்தில் மாநில அரசு களை மத்திய அரசு கலந்தாலோசிக்கவே இல்லை.  இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என நேரடியாக மத்திய அரசு கருத்துக் கேட்பது கூட்டாட்சி தத்து வத்தின் மீது கட்டாரி வீசுவது போன்றதும் ஆகும்.

புதிய கல்விக்கொள்கை வரைவறிக்கையை வெளியிட்டு, நாடு முழுவதும் கருத்துக் கேட்பதாக நாடகம் ஆடினார்கள். அதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருத்தங்களும் முன்மொழியப்பட்டன. ஆனால் அவை எதையும் ஏற்காமல் ஆர்எஸ்எஸ் ஆசாமிகள் எழுதிக் கொடுத்ததையே புதிய கல்விக் கொள்கை என்று அறிவித்துவிட்டு இப்போது ஆசிரியர்கள் கருத்துக் கூறலாம் என்று கேட்பது யாரை ஏமாற்றும் வேலை? மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை பொறுத்த வரை ஒரே ஒரு கருத்துதான் அது இந்தக் கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே.

;