headlines

img

மிரட்டல் வெற்றி பெறாது

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் 48,800 போக்குவரத்து ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்திருக்கிறார். இதன் மூலம் தொழிலாளர்கள் ஜனநாயகப்பூர்வமான, சட்டப்பூர்வமான வேலைநிறுத்த உரிமையை பறிப்பது மட்டுமின்றி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து அராஜகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக கடந்த மாதமே வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த ஒரு மாத கால இடைவெளியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுத்திட முனையவில்லை. 

மாநில போக்குவரத்துக்கழகத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசு வழங்கிடும் பல்வேறு மானியத் திட்டங்களுக் கான நிதியை வழங்கிட வேண்டுமென்றும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டு மென்றும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தி ருந்தனர். ஆயினும் அதுபற்றி இம்மியும் அசையாத மாநில அரசு ஒரேயடியாக 48,800 பேரை பணி யிலிருந்து நீக்கியிருக்கிறது. அதற்கு மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கூறி யிருக்கும் காரணம் மிகவும் விசித்திரமானதாகும். போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கும் போது போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ளார்.ஆனால் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் காரணமில்லை.

வேலைநிறுத்தத்தை உடைப்பதற்காக பயிற்சி பெறாத ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு அமர்த்துவதும், அதனால் விபத்துக்கள் நடை பெறுவதும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூ லிப்பதுடன் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதும் தவிர்க்க உடனடியாக மாநில அரசு போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அதுவே மாநில மக்களின் பாதுகாப் பான பயணத்திற்கும் போக்குவரத்துக் கழகத்தை பாது காப்பதற்கும் உரிய நடவடிக்கையாக அமையும்.  ஆனால் மாநில அரசோ முழு போக்குவரத் தையும் தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்தி ருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கவே செய்யும். எனவே இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

;