headlines

img

யாருக்குச் செல்கிறது அந்தப் பெருந்தொகை?

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயா ரிப்புக்கு ஒரே ஒரு நயாபைசா கூட தரப்பட வில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2020 மே 13 அன்று கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இதில் தடுப்பூசியை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தகவல்களை அளிக்குமாறு லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியபோது தெளிவான பதில் அளிக்கப்படவில்லை. அடுத்தடுத்து கேட்டதற்கு தடுப்பூசியை உருவாக்க நிதி எதையும் ஒதுக்கவில்லை என்று கூறியதோடு பிஎம் கேர்ஸ் நிதி என்பது பொதுத்துறை நிறுவன மல்ல, எனவே மேலும் விபரங்கள் எதையும் தரத் தேவையில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அப்பட்டமான மோசடி அல்லவா? கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிஎம் கேர்ஸ் என்ற நிதியை உருவாக்க விளம்பரம் செய்யப் பட்டது. ஏராளமான தனியார் நிறுவனங்களி டமிருந்து பல நூறு கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டது. ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியத்தி லிருந்தும் பிடிக்கப்பட்டது. 

பிரதமர் நிவாரண நிதி என்ற பெயரில் வசூலிக்கப்படுவது தான் வழக்கம். ஆனால் பிஎம் கேர்ஸ் குறித்து கேள்விகள் எழுந்தவுடன் இது ஒரு தனியார் அறக்கட்டளை; இதற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றார் கள். அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசு தணிக்கைக்கு இந்த நிதி உட்பட்டது அல்ல என்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கூட பதிலளிக்க அவசியம் இல்லை என்றும் கூறிவிட்டார்கள்.

பிரதரின் படம், இந்திய அரசின் சின்னம் அனைத்தையும் பயன்படுத்தி விட்டு அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதும் யாரும் கணக்கு கேட்க முடியாது, தணிக்கை செய்ய வும் முடியாது எனக் கூறுவதும் என்ன நியாயம் என்று அப்பொழுதே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது; இதுவரை என்னென்ன வகையில் செலவிடப்பட்டுள்ளது என்பது கூட வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிதியை ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் கஜானாவில் ஒப்படைக்க வேண்டு மென்றும் அப்பொழுதே கோரிக்கை எழுந்தது. அது எந்தளவுக்கு நியாயமானது என்பதையே இப்போது கிடைத்துள்ள தகவல் உறுதிப்படுத் துகிறது. கோவிட் பெருந்தொற்றில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி கிடைப்பது கூட குதிரைக் கொம்பாக உள்ளது. ஒன்றிய நிதியமைச்சகம் அளித்த சலுகைகள்கூட கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கே பயன்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவ னங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி தயாரிப்பு என்பது கூட தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கே பயன்படுகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பயன்படாத பிஎம் கேர்ஸ் நிதி யாருக்குச் செல்கிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இருக்கிறது.

;