headlines

img

நியாயமற்ற விலை உயர்வு

ஒன்றிய பாஜக அரசு தனக்கான வருவாயை அதிகரிக்கிறேன் என்ற பெயரில் சாமானிய மக்கள் மீது நாள்தோறும் கடுமையான சுமைகளை ஏற்றி வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் உள்பட பல்வேறு துறையினர் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பல்வேறு பொருட்களில் மறைமுகமாக எதிரொலிக்கிறது. 

இன்றைய நவீன உலகில் சமையல் எரிவாயு அனைத்து குடும்பங்களிலும் தவிர்க்க இயலாத தாகி விட்டது. நியாயவிலைக்கடைகளில் மண்ணெண்ணெய் குறைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான வீடுகளில் சமையல் எரிவாயுவே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு புதிய இணைப்புக்கான கட்டணத்தைக் கடுமையாக உயர்த்துவதைத் தவிர்த்திருக்கவேண்டும். ஆனால் மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றும் வகையில் இணைப்புக் கான கட்டணத்தை உயர்த்தி விட்டது. 

 இனி விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலிண்டர் என்றால்  2,200 ரூபாயை காப்புத்தொகையாக செலுத்த வேண்டும். இது ஏற்கனவே 1,450 ரூபாயாக இருந்தது. இதுவே இரண்டு சிலிண்டர் பெற விரும்பினால் 4,400 ரூபாய் செலுத்தவேண்டும். இது ஏற்கனவே 2,900 ரூபாயாக இருந்தது. ஐந்து கிலோ சிலிண்டருக்கான  காப்புத்தொகை 800 ரூபாயிலிருந்து 1,150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ரெகுலேட்டர் காப்புத் தொகையும் 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனுக்கு டன் அமலுக்கு வந்துள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத்  தாண்டிவிட்டது. அதைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வரும் போது காப்புத் தொகை உயர்வு மற்றும் சிலிண்டர் விலை உயர்வு புதிதாகச் சமையல் எரிவாயு பயன்படுத்த விரும்பும் குடும்பங்களை  மீண்டும் விறகு அடுப்பு பக்கமே தள்ளிவிடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. விறகு அடுப்பிலிருந்து வெளியேறும் புகையால் ஏராளமான பெண்கள் சுவாசக் கோளாறு உள்பட பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டனர். அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான பெண்கள் புகை அடுப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட னர். ஆனால்  ஒன்றிய அரசின் இத்தகைய நடவ டிக்கைகள் அந்த நோக்கத்தைச் சிதறடித்துவிடும்.

 சாமானிய மற்றும் நடுத்தர மக்களைச் சுரண்டித்தான் அரசின் வருவாயை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்ற கொள்கையே மோசமானது.  ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் தனது வருவாயை அதிகரித்துக் கொள்ள முடியும். ஜிஎஸ்டி மூலமாக ஒன்றிய அரசுக்குத் தேவையான வரி வருவாய் கிடைக்கிறது. 

நாட்டில் ஜிஎஸ்டி விதிக்கப்படாத பொருளோ,  சேவையோ இல்லை. எனவே எரிவாயு சிலிண்டருக்கான காப்புத்தொகையை உயர்த்தி ருப்பதைத் திரும்பப்பெறவேண்டும். உழைத்து வருவாய் ஈட்டும் சாமானிய மக்களின் வருவாயையும் அவர்களின் சேமிப்பையும் விலை உயர்வு என்ற பெயரில்  சூறையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

;