headlines

img

அடுத்த பலி ஜனநாயகமா?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடித்த கதையாக இந்தியாவின் நாடாளு மன்ற ஜனநாயக முறைக்கே வேட்டு  வைக்கத் துணிந்துவிட்டது ஆர்எஸ்எஸ் - பாஜக வகை யறா. இதன் முன்னோட்டமாகவே பேசியிருக்கி றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.   “சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளான நிலை யில் பல கட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டதாக மக்களுக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது; பல கட்சி ஜனநாயகத்தால் நமது இலக்கை எட்ட முடியுமா; பல கட்சி ஜனநாயகத்தால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று அமித்ஷா பேசியுள்ளார். இது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகமல்ல. மக்க ளின் பெயரைச் சொல்லி தங்களது இந்து ராஷ்டிரா இலக்கை நிறைவேற்றிக் கொள்ள இவர்கள் முயல்கிறார்கள்.  ஏற்கனவே வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போதும், அரசியல் சாச னத்தை திருத்தி நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு முடிவு கட்ட முனைந்தனர். ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அப்போது அது சாத்தி யமாகவில்லை. தற்போது மக்களவையில் தங்க ளுக்கு பெரும்பான்மை இருப்பதாலும், மாநிலங்க ளவையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மை இருப்பதாலும் தங்களது நோக் கத்தை பாஜக மூலம் முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள பாசிச பாணி ஆர்எஸ்எஸ் முயல்கிறது.

பல கட்சி ஜனநாயக முறையில்தான் வெற்றி பெற்று பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆட்சியில் வானத்தை வில்லாக வளைத்து விட்டதாகவும் மணலை கயிறாக திரித்து விட்ட தாகவும் மோடி, அமித்ஷா போன்றவர்கள் கதை யடித்து வருகின்றனர். மறுபுறத்தில் பலகட்சி ஜன நாயக முறை தோல்வியடைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.  சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் பல்வேறு சாத்தியக்கூறுக ளையும் ஆய்வு செய்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு பல கட்சி ஜனநாயக முறையே ஏற்புடையது என்ற முடிவுக்கு வந்தார்கள். மொழி களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. மத்தியில் கூட்டணி அரசுகள் தொடர்ந்து அமைந்து வருவதும் பன்முகத்தன்மையின் வெளிப்பாடே.

ஆனால் மாநிலங்களை சிதைத்து, மத்தியில் அனைத்து அதிகாரங்களையும் குவிப்பதன் மூலமே தங்களது இந்துராஷ்டிர நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்ற முடியும் என்று கருது வதால்தான் கல்வி துவங்கி பொது விநியோகம் வரை அனைத்தையும் மையப்படுத்தி வருகின்றனர். தேர்தல் முறையையும் மாற்ற முயல்கின்றனர்.  அமித்ஷா கூறியுள்ளது மிக மிக ஆபத்தான கருத்தாகும். இந்திய ஒருமைப்பாட்டையும், ஜன நாயகத்தையும், மதச்சார்பின்மை கோட்பாட்டை யும் கருவறுக்கத் துடிக்கும் இவர்களை  இந்தியா வில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜனநாயக எண்ணம்கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்காவிட்டால் ஜனநாயக இந்தியா வில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

;